பிரித்தானியாவின் பில்கேட்ஸ்..738 கோடிக்கு சொந்தக்காரர் ரூபன் சிங் எப்படி இருக்கிறார்? வைரலாகும் புகைப்படம்

289

பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் 7 நாட்களில், 7 ரோய்ஸ் கார்கள் என்பதன் மூலம் பிரபலமடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வருபவர் ரூபன் சிங்(42). இந்திய வம்சாவளியான இவர் ஆடம்பரகார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

தொழிலதிபரான இவர் 7 நாட்களுக்கு 7 நிறங்கள் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வருகிறார்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் தான் எந்த காரில் செல்கிறனோ அந்த காருக்கு ஏற்றவாறு டர்பன்களை மாற்றி காரில் பயணிக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் கடந்த 2000-ஆம் ஆண்டு பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று ரூபன் சிங்குக்கு 738 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. இவரை பிரித்தானியா பில்கேட்ஸ் என்று புகழாரம் சூட்டியது.

இதையடுத்து நகை கலெக்‌ஷன் என்ற பெயரில் மாணிக்கம், மரகதம், நீலம் ஆகியவற்றின் நிறங்களில் மேலும் புதிதாக ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்கியுள்ளார்.

சீக்கியரான இவருக்கு சீக்கிய கொள்கைகளின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதால், எல்லாமே கடவுளின் அருளால் தான் சாத்தியம் என்று கூறியுள்ளார்.