பல ஆண்களுடன் நெருக்கம்…. சினிமா ஆசையால் சீரழிந்த நடிகை: வெட்டி கொலை செய்த கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

598

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி பெண் ஒருவரில் கால்கள் மற்றும் கைகள் குப்பையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், சினிமா ஆசையால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதும், இதனால் மனைவியை கொலை செய்து துண்டு, துண்டாக வெட்டி வீசியதாக கணவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோடம்பாக்கம் பகுதியில் கொட்டப்பட்ட .குப்பையில் கண்டுபிடிக்கப்பட்ட கை கால்கள் கொண்ட படங்களை வைத்து, கொலை செய்யப்பட்ட பெண் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏதாவது காணாமல் போன பெண்ணாக இருக்குமா? என்று விசாரித்தனர். அதில் எந்த துப்பும் கிடைக்காததால் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்று விசாரித்தனர்.

பின்னர் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வேலைக்கு ஆட்களை அழைத்து வரும் ஏஜெண்டுகளிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனால் கை, கால்கள் அடங்கிய புகைப்படங்களுடன் கூடிய துண்டு அறிக்கைகளை தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு பள்ளிக்கரணை பொலிசார் அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கடலூர், கோவை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காணாமல் போன 3 பெண்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தன. கோவையைச் சேர்ந்த பெண்ணை பற்றிய விவரங்களை விசாரித்தபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.

தூத்துக்குடியில் இருந்து வந்த தகவலில் சந்தியா (வயது 37) என்பவர் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்த தகவல் கிடைத்தது. ஆனால் அவரை பற்றி பொலிஸ் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை.

ஆனால் அவரது கணவரான சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் (51) என்பவர் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து கணவர் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தியதில், அவர் எனக்கும் எனது மனைவிக்கும் எந்த தொடர்பும் இல்லை, இருவரும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளோம் என பதில் அளித்துள்ளார்.

‘இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார் அருகல் இருப்பவர்களிடம் நடத்திய விசாரணயில், இவருடன் ஒரு பெண் வந்து தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் பாலகிருஷ்ணனின் கிடுக்கிப்பிடி விசாரணயில் நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

எனது சொந்த ஊர் தூத்துக்குடி டூவிபுரம் ஆகும். சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மோகம் அதிகம். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் எனக்கும், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாவுக்கும் திருமணம் நடந்தது.

எங்களுக்கு மாயவர்மன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர். மகன் பிளஸ்-1 வகுப்பும், மகள் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு முன் ‘காதல் இலவசம்’ என்ற படத்தை இயக்கி, தயாரித்தேன்.

இந்த நிலையில் சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க ஆசை ஏற்பட்டது. ஆனால் அதை நான் விரும்பவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, என்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறி சந்தியா விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் விவாகரத்து செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

எங்களுக்குள் கருத்து வேறுபாடு அதிகமானதால் மகனையும், மகளையும் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் விட்டுவிட்டு சினிமா வாய்ப்புகளை தேடி மீண்டும் சென்னைக்கு வந்தேன்.

அப்போது எனது மனைவி சந்தியா சைதாப்பேட்டையில் பெண்கள் விடுதியில் தங்கி இருந்து ஆண் நண்பர்கள் மூலமாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்துகொண்டு இருப்பதாக அறிந்தேன்.

மேலும் சினிமா ஆசையால் அவரது நடவடிக்கைகளும் மாறி இருந்தன. இதனால் அவரை கண்டித்தேன். பின்னர் டிசம்பர் மாதம் ஊருக்கு சென்றுவிட்டார். பொங்கல் பண்டிகை முடிந்ததும் மீண்டும் சென்னை வந்தார்.

இதை அறிந்த நான், சந்தியாவை கடந்த 15-ந் தேதி வீட்டுக்கு அழைத்து வந்தேன். “நீ சினிமாவில் நடிக்க வேண்டாம். வீட்டிலேயே இரு. பிள்ளைகளை அழைத்து வந்து ஒன்றாக வாழலாம்” என்று கூறினேன்.

இந்த நிலையில், சந்தியா இரவு நேரத்தில் வெளியே செல்ல முயன்றார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கடந்த 19-ந் தேதி இரவு வெளியே செல்ல சந்தியா தயார் ஆனார். அப்போது, வெளியே செல்லக்கூடாது என்று கூறினேன். அதற்கு சந்தியா, “என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமை இருக்கிறது” என்றார்.

இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, வீட்டில் இருந்த சுத்தியால் சந்தியாவின் தலையில் ஓங்கி அடித்தேன். இதனால் சந்தியா மயங்கி விழுந்தார். அருகில் சென்று பார்த்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, என்ன செய்வது என்று யோசித்தேன். யாரிடமும் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடலை துண்டு, துண்டாக வெட்டி பல இடங்களில் போட்டுவிடலாம் என்று முடிவு செய்தேன். மறுநாள் 20-ந் தேதி அரிவாளால் கை, கால், தலை, உடல், இடுப்பு என துண்டு, துண்டாக உடலை கூறுபோட்டேன்.

அவற்றை 4 பார்சல்களாக கோணிப்பையில் போட்டேன். இடுப்பு முதல் தொடை வரையிலான பாகங்கள் அடங்கிய பார்சலை பாலத்தின் அடியிலும், தலை, உடல் பாகங்கள் கொண்ட 2 பார்சல்களை ஜாபர்கான்பேட்டையில் வெவ்வேறு குப்பை தொட்டிகளிலும் 2 கால், ஒரு கை கொண்ட பார்சலை கோடம்பாக்கம் குப்பை தொட்டியிலும் போட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.