டிக் டாக் என்னும் செயலியில் எனக்கு தமிழ் கலாச்சாரத்தை பிடிக்காது என அவுஸ்திரேலியாவை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பேசும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலமாகவே டிக் டாக் என்னும் செயலியானது உலகம் முழுவதிலுமுள்ள மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆரம்பத்தில் பொழுது போக்கிற்காக பயன்படுத்தப்பட்ட இந்த செயலி, தற்போது வேறு வேலையே இல்லாமல் வெட்டியாய் பொழுதை கழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுவர்கள் துவங்கி இல்லத்தரசிகள் வரை பலரும் இதில் மூழ்கியுள்ளனர். அதிக லைக்குகள் பெற்று பிரபலமடைய வேண்டும் என்னுடன் ஆசையில், பெண்கள் பலரும் தங்களுடைய அந்தரங்க பாகங்களை காட்டி வீடியோ செய்து வருகின்றன.
இதனை பார்க்கும் ஒரு சில ஆண்கள், சம்மந்தப்பட்ட பெண்களின் வீடியோக்களுக்கு கீழ் கீழ்த்தரமான கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதிலும் ஒரு சிலர், அறிவுரை கூறும் விதமாகவும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
அந்த வரிசையில் ஆபாசமான வீடியோக்களை வெளியிட்டு வந்ததால், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் பெண் ஒருவரை இளைஞர்கள் வெளுத்து வாங்கியிருக்கின்றனர்.
அதனை பொறுக்க முடியாத அந்த பெண், தமிழ் கலாச்சாரம் என்னும் பெயரில் தன்னுடைய அழகான உடலை வெளியில் காட்ட விடாமல் தடுக்கின்றனர் எனக்கூறியதோடு, தமிழ கலாச்சாரத்தை பிடிக்கவில்லை எனவும், அதற்கு ஆதரவாக பெண்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்ச்சையான அந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் பலரும் மீண்டும் அந்த பெண்ணிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பெண்களை பாதைமாற்றிய டிக்டாக் மோகம்
”எனக்கு அட்வைஸ் பன்ன வேணாம்” பெண்களை பாதைமாற்றும் டிக்டாக் மோகம்!கட்டுப்பாடுகள் வருமா?#TiktokFever #Tiktok #TamilCulture
Posted by சற்று முன் on Friday, February 8, 2019