8 வருசமா எனக்கு குழந்தையில்லை… 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய 34 வயது நபர்… நேர்ந்த விபரீதம்

744

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மீன் வியாபாரிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் சின்னதுரை (34). மீன் வியாபாரி.

கடந்த 2017 மார்ச் மாதத்தில் தனது உறவினர் வீட்டில் 15 வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த சின்னதுரை அங்கு சென்றார்.

பின்னர் சிறுமியை அழைத்துக்கொண்டு அங்குள்ள கரும்பு வயலுக்கு சென்றார். அங்கு சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுத்த சின்னதுரை, அந்த சிறுமியிடம் எனக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

ஆகவே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ய முயன்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமியை சின்னதுரை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். இதில் மயங்கிய அந்த சிறுமி சிறிது நேரம் கழித்து எழுந்தார். அப்போது அந்த சிறுமியிடம் இது பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் அதை சொல்லாத நிலையில், சிறுமியை சின்னதுரை பலமுறை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதில் அந்த சிறுமி 3½ மாத கர்ப்பிணியானார்.

இது பற்றி அந்த சிறுமி சின்னதுரையிடம் கூறியபோது, அவர் சில மாத்திரைகளை கொடுத்துள்ளார். அதில் அவரது கர்ப்பம் கலைந்து விட்டதாக தெரிகிறது.

இதையறிந்த சிறுமியின் தந்தை பொலிசில் புகார் செய்த நிலையில் பொலிசார் சின்னதுரையை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சின்னதுரைக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்க இலவச சட்ட உதவி மையத்தை நாட உத்தரவிடப்பட்டுள்ளது.