என் அம்மாவுக்கு இரண்டு கணவர்கள்… இரண்டாவது அப்பாவால் எனக்கு நேர்ந்த கொடுமை.. சிறுமி கண்ணீர்

392

தமிழகத்தில் 2வது தந்தை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 15 வயது சிறுமி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி புகார் மனு அளித்தார்.

மனுவில், எனது தாய்க்கு 2 கணவர்கள். நான் தாய், 2 தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறேன்.

எனது 2-வது தந்தை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து எனது அம்மாவிடம் கூறியபோது அவர் 2-வது தந்தையை கண்டித்தார். இருந்தாலும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இதனையடுத்து நான் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு போனில் தொடர்பு கொண்டு கூறினேன். அதிகாரிகள் எனது அம்மாவிடம் விசாரணை நடத்தினர்.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.