தங்கமீன்கள் செல்லம்மாவா இது?.. அம்மாடியோவ் எப்படி மாறிட்டாங்கனு பாருங்க!

478

டைரக்டர் ராம் படங்கள் என்றாலே அவற்றில் தனித்துவமான விஷயங்கள் இருக்கும். குறிப்பாக, மனித மனங்களில் ஒளிந்திருக்கும் உளவியலை தோண்டி எடுக்கக்கூடியதாகவும் நம்முடைய இயலாமையை மறைத்து எப்படி வாழ்க்கையை கமர்ஷியலாக்கிவிட்டோம், எதையெல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் படங்களாவே அவை இருக்கின்றன. அதில் மிக முக்கியமான இரண்டு படங்கள் என்றால் கற்றது தமிழ், தங்கமீன்கள். தற்போது பேரன்பு.

தங்கமீன்கள் படத்தில் ராமே நடித்திருப்பார். அதில் அவருக்கு மகளாக நடித்திருக்கும் செல்லம்மா தான் கதாநாயகி. அந்த செல்லம்மாவை நம் யாராலும் மறக்க முடியாது. ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலும் செல்லம்மாவும் பிரிக்க முடியாத இணைகளாக அந்த படத்தில் இருப்பார்கள். நம்முடைய மனதை தங்கமீனாகப் போறேன் என்னும் டயலாக்கால் கட்டிப்போட்ட குழந்தை அது. அந்த குட்டி செல்லம்மா யார், என்ன செய்து கொண்டிருக்கிறார், இப்போ எப்படி இருக்கிறார் என மிக விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

செல்லம்மா என்கிற சாதனா

செல்லம்மா என்கிற சாதனா

செல்லம்மாவின் உண்மையான பெயர் சாதனா. இவர் பிறந்தது தமிழ்நாட்டுல இல்லைங்க. இவர் பிறந்து தன்னுடைய ஐந்து வயது வரை துபாயில் தாள் வளர்ந்தார். தன்னுடைய அப்பா சென்னையில் வேலைக்கு வந்ததால் குடும்பமே இங்கே குடிபெயர்ந்து விட்டார்கள்.

இயக்குநர் ராம் அறிமுகம்

சாதனாவின் அப்பா வெங்கடேசுக்கு நெருங்கிய நண்பரும் அவர்களுடைய குடும்ப நண்பருமான ஒருவர் மூலமாகத் தான் இயக்குநர் ராம் இவர்களுடைய குடும்பத்துக்கு அறிமுகமாகி இருக்கிறார். அவ்வப்போது குடும்த்துடன் ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிற போது சாதனாவைப் பார்த்த ராம் தன்னுடைய செல்லம்மாவாக மாற்ற வேண்டும் என்று விரும்ப, அது பலித்தது. நமக்கும் அருமையான செல்லம்மா கிடைத்தாள். அப்போது அவளுக்கு வயது எட்டு.

இயக்குநர் ராம் அறிமுகம்

மீண்டும் துபாய்

ஐந்து வயதில் சென்னைக்கு வசந்த சாதனாவின் குடும்பம் தங்கமீன்கள் படம் வெளியாகும் சமயத்தில் சாதனாவின் படிப்பு மற்றும் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் துபாய்க்கு சென்று செட்டிலாகிவிட்டார்கள்.

மீண்டும் துபாய்

படிப்பு

சென்னையில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் துபாய் சென்றதும் gems our own indian என்னும் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அந்த பள்ளி இந்திய வம்சாவளி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. காலையில 7 to 1.45 தான் ஸ்கூல். அப்புறம் பாட்டு, டான்ஸ், டிராயிங்னு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டில நம்ம செல்லம்மா இறங்கிடுவாளாம். தற்போது பத்தாம் வகுப்பு பப்ளிக் தேர்வுக்காக காத்திருக்கிறார்.

படிப்பு

அவார்டு

துபாய் நாட்டில் ஒவ்வொரு வருடமும் படிப்பு மற்றும் இதர செயல்பாடுகளில் மிகச் சிறப்பாக பங்குபெறும் மாணவர்களுக்காக ‘HBRADAP’ – (hamdan bin rashid al maktoum award for distinguished acadamic performance என்னும் விருது வழங்கப்படும். இதுதான் மாணவப் பருவத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற மிக உயரிய விருதாகும். 1000 த்துக்கு 994 மார்க் வாங்கி, அந்த விருதை நம்ம செல்லம்மா வாங்கியிருக்கிறார். அந்த விருது துபாய் நாட்டு மன்னரின் கையால் வழங்கப்பட்டது.

அவார்டு

டான்ஸ் அரங்கேற்றம்

துபாயிலிருந்து பள்ளி காலாண்டுத் தேர்வு வீடுமுறைக்காக இரண்டு மாதங்கள் சென்னைக்கு வந்து தங்கியிருந்த சாதனா வெறுமனே சென்னையை ஊர் சுற்றி விட்டு போகலங்க. அந்த இரண்டு மாதத்தில் மிகச்சரியாக திட்டமிட்டு தன்னுடைய நடன அரங்கேற்றத்தையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இவரோட குரு இவரோட அம்மாவே தான். தன்னோட ஐஞ்சு வயதிலிருந்து அவரிடம் தான் டான்ஸ் கத்துக்கிறாங்களாம்.

டான்ஸ் அரங்கேற்றம்

தேசிய விருது செல்லம்மா

தங்கமீன்கள் படத்தில் செல்லம்மாவின் நடிப்பைப் பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். பொதுவாக நம் எல்லோருக்கும் சுட்டிக் குழந்தையைத் தான் பிடிக்கும். ஆனால் அதைவிட அதிகமாக செல்லம்மாவைப் பிடித்திருந்தது. அந்த செல்லம்மா கதாபாத்திரத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை சாதனா பெற்றிருப்பது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று தான்.

தேசிய விருது செல்லம்மா

பேரன்பு

தற்போது அதே இயக்குநர் ராமின் பேரன்பு படத்தில் சாதனா ஒரு ஸ்பெஷல் சைல்டாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகளாக நடித்திருக்கிறார். இதில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பாப்பா. ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை.

பேரன்பு

மூன்று மாதங்கள்

இந்த படத்துக்காக மாற்றுத் திறனாளியாக நடிப்பதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி ஒன்றில் மூன்று மாதங்கள் அவர்களுடனேயே தங்கியிருக்கிறார். அவர்களைப் பற்றிய விஷயங்களை இந்த வெளி உலகத்துக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என்ற முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். கள்ளம் கபடமின்றி செல்லம்மாவாக அறிமுகமான சாதனா வளர்ந்த பிறகு செய்கிற காரியங்கைளைப் பார்த்தால் உண்மையிலேயே நம்மைப் பெருமைப்பட வைக்கிறது.

மூன்று மாதங்கள்

டயானா விருது

இயக்குநர் ராம் தான் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்றும் அவர் பேரன்பு படத்துக்காக மாற்றுத் திறனாளி குழந்தைகளுடன் தங்கிய போது, ராம் உன்னால் முடிந்த உதவிகளை மாற்றுத் திறனாளிகளுக்காக ஏதாவது செய் என்று சொன்னாராம். அதற்கான தான் மீண்டும் துபாய் திரும்பிய பின்னர், அங்கிருக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இசைப்பயிற்சி, பேச்சுப்பயிற்சி ஆகியவற்றைச் செய்திருக்கிறார். இதன் காரணமாக சமூக மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுகிற இளம் சாதனையாளர்களுக்கு கொடுக்கப்படும் சர்வதேச விருதான இளவரசி டயானா விருதை இவர் பெற்றிருக்கிறார்.

டயானா விருது