மனைவி இறந்த பின் வேறு பெண்களுடன் தொடர்பு: தாயில்லாத குழந்தையை சூடு வைத்து சித்திரவதை செய்த கொடூர தந்தை

657

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாயில்லாத 7 வயது குழந்தையை சொந்த தந்தையே நெருப்பால் சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (33) என்பவரே ஆவார்.

இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் ஏற்ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

மணிகண்டனுக்கு 7 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்..

மனைவி இறந்த பிறகு சமீப காலமாக வேறு பெண்களுடன் மணிகண்டன் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது

மணிகண்டனின் 7 வயது மகள் வாவறை அரசு பள்ளியில் 2 ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக மகளுக்கு உடலில் சூடு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாணவியின் கன்னத்தில் தீக்காயம் இருந்ததை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிக்கு தகவலளித்தனர்.

தகவலறிந்து வந்த நாகர்கோவிலில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் மணிகண்டனிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது, தனது அப்பா தொடர்ந்து அடித்து துன்புறுத்தி நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்வதாக சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு மணிகண்டனை நாகர்கோவில் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போலீசார் மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் பரிந்துரை செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.