நிர்வாணமாக வீட்டு வேலை செய்ய ஆட்கள் தேவை என அறிவித்த லண்டன் நிறுவனம்: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

1906

லண்டனில் இயங்கும் தூய்மை சேவை நிறுவனம் ஒன்று வீடுகளில் நிர்வாணமாக பணிபுரிய ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Naturist Cleaners என்ற தூய்மை சேவை நிறுவனம் தனது வளைதளத்தில் விடுத்துள்ள செய்தியில், பிரித்தானியாவில் உள்ள வீடுகளில் வீட்டு பணிகளை நிர்வாணமான நிலையில் செய்ய ஆட்கள் தேவை.

இதற்கு முன் அனுபவம் எல்லாம் தேவையில்லை, நிர்வாணமாக பணி செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு £45 ஊதியம் வழங்கப்படும்.

நிர்வாணமாக பணி செய்ய விருப்பமில்லாதவர்கள் உடைகள் அணிந்து வேலை செய்தால் ஒரு மணி நேரத்துக்கு £25 ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

எங்களிடம் திறமையான பணியாளர்கள் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதே எங்களின் முக்கிய குறிக்கோள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தங்களின் இணையதள முகவரியை நாடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.