கல்யாண தேதியை அறிவித்த நயன்தாரா.. மகிழ்ச்சியில் விக்னேஷ் சிவன்.. எப்போது தெரியுமா?

1023

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து பலரையும் வெறுப்பேற்றி வருகின்றனர்.

nayanthara house க்கான பட முடிவு

திருமணம் எப்போது?
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். பிறகு அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. சில வருடங்கள் ஜோடி புறாக்களாக சுற்றிவந்த இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்களாம். இதனை நயன்தாராவே தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவர் கூறியதாவது, தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய வெற்றி படங்களை கொடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி நான் 100 படங்களில் நடித்து முடித்த பின்னர் திருமணம் பற்றி முடிவெடுப்பேன் என நயன் கூறியதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது .

தற்போதுவரை நயன்தாரா 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக அவர் 100 படங்கள் நடித்து முடிப்பதற்கு இன்னும் 3 ஆண்டுகளாவது ஆகும். அது வரையில் விக்னேஷ் சிவன் காத்திருப்பாரா?…