நிர்வாணமாக கனவுகள் வந்தால் என்ன ஆபத்து தெரியுமா?

329

கனவில் பல விதங்கள் உண்டு. சிலர் நம்மை கொல்வது போன்றோ, நாம் மாடியில் இருந்து கீழே விழுவது போன்றோ, அல்லது நமக்கு பிடித்தவர் இறப்பது போன்றோ கனவுகள் வர கூடும்.

ஆனால், இவற்றில் ஒரு சில கனவுகள் நம்மை நிம்மதியாக தூங்க கூட விடுவதில்லை.

உங்கள் கனவில் யாரோ துரத்தி வருவது போன்றோ அல்லது நாய்கள் துரத்துவது போன்றோ வந்தால் அவற்றிற்கு சில அர்த்தம் உண்டு.

நீங்கள் எதையும் கண்டு ஒதுங்கி போவதாலே இப்படியான கனவுகள் உங்களுக்கு வருகிறது. வேலையின்மை, எதை செய்தாலும் தோல்வி, கடன் போன்ற பிரச்சினைகள் கொண்டோருக்கே இந்த கனவுகள் ஏற்படும்.

நீங்கள் மட்டும் ஒரு வீட்டிற்குள்ளோ அல்லது தனியாக ஒரு காட்டிற்குள் இருப்பது போல கனவுகள் ஏற்பட்டால், உங்களின் தனித்துவமான திறமைகளை வெளிபடுத்த இயலாமல் கஷ்டப்படுகிறீர்களா என்று அர்த்தம்.

மேலும், உங்கள் இயலாமையை இது போன்ற கனவுகள் தனிமையின் மூலமாக கனவாக வெளிப்படுத்துகின்றன.

உங்களுக்கு தேர்வில் தோல்வி அடைந்தது போன்ற கனவிற்கு அர்த்தம் உண்டு. பெரும்பாலும் இது போன்ற கனவுகள் எதோ ஒரு புது விஷயத்தை செய்யும் போது தான் உங்களுக்கு தோன்றும். அதிக தயக்கம், பயம், கவலை முதலியவை இருந்தால் இந்த வகை கனவுகள் தோன்றும்.

அரை நிர்வாணமாகவோ அல்லது முழு நிர்வாணமாகவோ கனவுகள் ஏற்பட்டால் இதற்கும் உளவியல் ரீதியாக சில அர்த்தங்கள் உண்டு. புதிதாக ஏதேனும் வேலையிலோ அல்லது புதிதாக ஏதேனும் உறவையே நீங்கள் தொடங்கி இருந்தால் இந்த வகை கனவுகள் உண்டாகும்.

மேலும், உங்களை பற்றிய பல சந்தேகங்கள், குழப்பங்கள் உண்டாகினாலும் இது போன்ற கனவுகள் வரும். மேலும் நீங்கள் ஏதேனும் ஆபத்தில் உள்ளதையும் இது குறிக்கிறது.