நான் உயிரிழக்க நேரிட்டால்….. மருத்துவமனையில் முருகன், நளினி! வெளியிட்ட உருக்கமான கடிதம்

144

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து முருகன், நளினி ஆகிய இருவரும் வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் அவர்களது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

விடுதலை குறித்து தாமதம் செய்வதை முன்னிட்டு கடந்த 2 ஆம் திகதி முதல் வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரம் இருந்து வருகிறார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு சிறையில் குளுகோஸ் ஏற்றப்பட்டது.

இவருக்கு ஆதரவாக பெண்க வேலூர் சிறையிலும் நளினி உண்ணாவிரதம் இருந்தததையடுத்து அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முருகன் எழுதியுள்ள கடிதத்தில், தான் சிறையில் உயிரிழக்க நேரிட்டால் முதலமைச்சர் பழனிச்சாமி தலையிட்டு என் உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக கொடுங்கள்’ உருக்கமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நளினியின் உறவினர் தேன்மொழி கூறியதாவது,கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள், அனைவரும் சேர்ந்து அவர்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும்.