அம்பானி வீட்டு திருமணத்தில் தரப்பட்ட உணவு வகைகள் என்ன? வியக்க வைக்கும் புகைப்படங்கள்

1419

முகேஷ் அம்பானி மகள் திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவு வகைகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி – ஆனந்த் பிரமல் திருமணம் பிரம்மாண்டமான முறையில் மும்பையில் நடைபெற்றது.

இந்த திருமண கொண்டாட்டத்தில் ஹிலாரி கிளிண்டன், ரஜினிகாந்த், அமீர்கான், தீபிகா படுகோன், ரன்பீர் சிங், சல்மான் கான் போன்ற பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு விதவிதமான உணவுகள் சாப்பிட வழங்கப்பட்டன.

Foodlink எனப்படும் மிக பெரிய கேட்டரிங் நிறுவனம் தான் அம்பானி வீட்டு திருமணத்தில் உணவுகளை தயார் செய்து பரிமாறியது.

அப்படி தயார் செய்யப்பட்டு அழகாக அடுக்கி வைக்கப்பட்ட உணவு பொருட்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி பிரம்மிக்க வைத்துள்ளது.

அம்பானி வீட்டு திருமணத்தில் உணவுகளை தயார் செய்த Foodlink நிறுவனம் தான், சமீபத்தில் இத்தாலியில் நடந்த நடிகை தீபிகா படுகோன் – நடிகர் ரன்பீர் கபூர் திருமணத்திலும் உணவுகளை தயார் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.