இந்த ஐந்து ராசிக்களில் பிறந்தவர்களை எப்பொழுதும் எவராலும் வாக்குவாதத்தில் வெல்ல முடியாதாம்!

229

ஜோதிட சாஸ்திரத்தின் படி சிஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணமுடையவர்கள்.

அந்தவகையில் எந்த ராசிகளில் பிறந்தவர்களை வாக்குவாதத்தில் வெல்ல முடியாது என்பதை இங்கு பார்ப்போம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் தங்கள் இருக்கும் குழுவில் அனைவரை விடவும் புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள், பலசமயம் அதனை சாதிக்கவும் செய்வார்கள்.

அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு முன் அதில் வெற்றி பெறுவதற்கான அனைத்து பணிகளையும், ஆய்வுகளையும் செய்து முடித்த பிறகுதான் அதில் இறங்குவார்கள்.

இவர்களை நோக்கி ஒரு சவால் வரும்போது அதனை சாதரணமாக இவர்கள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ரிஷபம்

இவர்களை வாக்குவாதத்தில் வெல்வது என்பது முடியாத காரியமாகும். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஆசைப்படலாம் ஆனால் வெல்ல ஆசைப்படக்கூடாது.

இவர்கள் எப்பொழுதும் சமாதானத்திற்கு வரமாட்டார்கள். இவர்களின் கவனம் எப்பொழுதும் தனது கருத்தை நிர்ணயிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கும்.

எதிராளிகள் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை இவர்கள் விடமாட்டார்கள். தனது கருத்தை நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

மகரம்

இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள் அதேசமயம் இவர்கள் எப்பொழுதும் மற்றவர்கள் முன் முட்டாளாக இருக்க விரும்பமாட்டார்கள். அதனால் அவர்கள் அதனை நிரூபிக்க கடினமாக முயற்சி செய்து தனது கருத்துதான் சரியானது என்று நிரூபிக்க முயலுவார்கள்.

தங்களின் கருத்துதான் சரியானது என்ற எண்ணத்தில் இவர்கள் மாறவே மாட்டார்கள், அது தவறானதாகவே இருந்தாலும் சரி.

இவர்கள் கடினமாக உழைக்க எந்த கூச்சமும் படமாட்டார்கள், அதனால் தனது கருத்தை நிரூபிக்க எந்த கூச்சமும் படாமல் முயற்சி செய்வார்கள்.

விருச்சிகம்

இவர்கள் கவனத்தில் மிகவும் சிறந்தவர்கள், அவர்களுக்கு தேவையெனில் அவர்களின் முழுக்கவனமும் தனது கருத்தை நிரூபிப்பதில் போடுவார்கள். தனது கருத்தை நிரூபிக்க வரையில் அவர்கள் எப்பொழுதும் ஓயமாட்டார்கள்.

சிலசமயம் இவர்களின் இந்த குணம்தான் இவர்களுக்கு மேலும் மேலும் முன்னேற தூண்டுதலாய் இருக்கும்.

இவர்கள் எப்பொழுதும் உறுதியாகவும், தனது கருத்தில் வலிமையாகவும் இருப்பார்கள் அதனை மற்றவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதை பற்றி அவர்களுக்கு கவலையில்லை.

சிம்மம்

சிம்ம ராசிக்கார்கள் எப்பொழுதும் தான்தான் சரியென நினைத்து கொண்டிருப்பவர்கள், அதை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ள படவில்லை எனில் அதனை நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

இவர்களின் மனபலம் எப்பொழுதும் வலிமையானதாக இருக்கும். இவர்களின் மனதை மாற்ற நீண்ட நேர சமாதானம் தேவைப்படும்.

தங்களுடைய மனதை மாற்றிக்கொள்வதற்கு பதிலாக இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் மனதை மாற்றவே முயலுவார்கள் அதனை சாதிக்கவும் செய்வார்கள்.