இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்ள மனைவியிடம் அனுமதி கேட்ட கணவன்: மனைவியின் ரியாக்‌ஷன்

596

மனைவியிடம் எதையும் மறைக்காத ஒரு நேர்மையான கணவன் தனது ஆசை ஒன்றை வெளியிட்டபோது மனைவி உடைந்து போனார்.

கணவனும் மனைவியும் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தனக்கு ஒரு ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார் அந்த கணவர்.

மனைவியும் அது என்ன ஆசை என்று கேட்க, தனக்கு இன்னொரு பெண்ணிடம் உறவு வைத்துக் கொள்ள ஆசை உள்ளதாக அந்த கணவன் கூற, அதிர்ந்துபோன அந்த பெண் அன்று முதல் அழுது கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.

கொஞ்ச நாட்களாகவே தனக்கு இள வயதுள்ள வேறு பெண்களை பார்க்கும் ஆசை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மனைவியின் கண்ணீரைக் கண்டபின் தனக்கு இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டதற்காக வருந்துவதாகவும், தனக்கு சாகும் வரை ஒரு மனைவிதான் என்பது புரியும் வரை மன நல சிகிச்சை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார் அந்த நபர்.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்து ஆலோசனை கேட்ட அந்த பெண்ணுக்கு பலரும் யோசனைகள் கூறி வரும் நிலையில், ஒரு பெண், உன் கணவர் நேர்மையாக கேட்டிருக்கிறார், உனக்கு தெரியாமல் துரோகம் செய்வதற்கு, இது எவ்வளவோ மேல் என்று கூறியிருக்கிறார்.

நானாக இருந்தால், துரோகம் செய்யப்படுவதற்கு பதில் நான் காயப்படுத்தப்படுவதையே ஏற்றுக் கொள்வேன் என்றும் அந்த பெண் கூறியிருக்கிறார்.