இரவு பணிக்கு சென்றுவிட்ட கணவன்…. வீட்டில் தனியாக இருந்த கவுசல்யாவுக்கு நேர்ந்த பயங்கரம்

740

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முருகன் என்பவருக்கும் 22 வயதான கவுசல்யாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

கவுசல்யா பலசரக்கு கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று இரவு கணவர் இரவு பணிக்கு சென்றுவிட்டார். மனைவி கவுசல்யா அந்த பகுதியில் நடைபெற்ற ஊர்திருவிழாவில் கலந்துகொண்டு விட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் காலையில் வெகுநேரமாகியும் கவுசல்யா வீட்டு கதவை திறக்கவில்லை. கடைக்கு வந்தவர்கள் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்தபோது கவுசல்யாக வெகுநேரமாகியும் அசைவற்று கிடந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது, கவுசல்யா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

கவுசல்யா கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை.

சம்பவத்தன்று இரவு நடந்த கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக அவர் நகைகளை அணிந்து சென்று இருக்கிறார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கவுசல்யா பின்னாலேயே வந்து அவரை கொலை செய்து விட்டு நகையை எடுத்து சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகத்தித்துள்ளனர்.

மேலும் கவுசல்யா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.