இறப்பதற்கு முன் இப்படி சொல்லிவிட்டு தான் இறந்தாராம் கிரேஸி மோகன்.. கதறிய எஸ்.வி சேகர்..!

533

சினிமா நாடகம் தொலைக்காட்சி என அனைத்திலும் திறம்பட நடித்து தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கிரேஸி மோகன் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதற்கு முன்னதாக இன்று காலையே தன் தம்பி பாலாஜி என்பவரிடம், “விவேகானந்தர், பாரதியார் இவங்க எல்லாம் சின்ன வயதிலேயே இறந்து விட்டார்கள் வந்த வேலை முடிஞ்சிட்டா போகவேண்டியது தான்.. வயசு எல்லாம் பார்த்தால் எப்படி? “என பேசினாராம். இந்த விஷயம் அவருடைய நண்பரான எஸ்வி சேகர் மூலமாக தற்போது வெளிவந்துள்ளது.

இன்று காலை தான் எதார்த்தமாக கிரேஸி மோகன் இவ்வாறு பேச, மதியத்திற்குள் அது நிஜமாகவே நடந்துவிட்டது. இந்த விஷயத்தை எஸ்வி சேகர் அவருடைய நண்பர்கள் அனைவரிடத்திலும் சொல்லி மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகி உள்ளார். கிரேஸி மோகனின் தம்பி பாலாஜியும் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளார்.

வந்த வேலை முடிந்து விட்டது என்பதற்கு ஏற்ப அவர் விட்டு சென்ற வசனங்கள் எக்காலத்திலும் மக்களை சிரிக்க வைக்கும்.. அதைப் பற்றிய சிந்தனை அனைவரிடத்திலும் இருக்கும். எனவேதான் அவர் சென்று விட்டார் போல என துக்கத்தை பகிர்ந்து வருகின்றனர் அவருடைய உறவினர்கள். இந்த சம்பவம் அனைவரையும் மேலும் துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.