உங்களுக்கு இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? அப்போ உங்க பெருங்குடல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாம்!

86

பெருங்குடல் (Large intestine) என்பது முதுகெலும்புள்ள உயிரினங்களின் செரிமான அமைப்பின் கடைசி பகுதியாகும்.

இது சீரண மண்டலத்தின் கடைசி பகுதி பெருங்குடல் ஆகும். திடக்கழிவுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் அவற்றிலிருந்து தண்ணீரையும் உப்பையும் பிரித்தெடுக்கும் வேலையை செய்கின்றது.

அந்தவகையில் பெருங்குடலில் புண் ஏற்பட்டு விட்டால் பெருங்குடலின் உட்சுவற்றிலும், மலக்குடலின் உட்சுவற்றிலும் புண்களை உண்டாக்கும் இதனால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிவப்பாக, வீக்கத்துடன் இருப்பதோடு, கடுமையான வேதனையைத் தரும்.

ஆரம்பத்தில் வயிற்று வலியில் ஆரம்பித்தாலும், நிலைமை மோசமாகும் போது இதன் அறிகுறிகளும் தீவிரமாக காணப்படும்.

மேலும் மலம் கழிக்கும் போது பெரும் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும். இதனை ஆரம்பக்கட்டத்திலேயே சரி செய்ய விடின் உயிரையே இழக்கும் அளவில் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

தற்போது பெருங்குடல் புண் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.

சாதாரணமாக வயிற்றில் பிரச்சனை இருந்தால், முதலில் வயிற்று வலி தென்படும். அதிலும் பெருங்குடல் புண் இருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்திப்பதோடு, வயிற்றுப் பிடிப்புக்களையும் அனுபவிக்க நேரிடும்.

பெருங்குடல் புண் இருப்பின் மலப்புழையில் கடுமையான வலியை சந்திக்க நேரிடுவதோடு, மலம் கழிக்கும் போது இரத்தக்கசிவும் ஏற்படும்.

அவசரமாக மலம் கழிக்க வேண்டுமென்று தோன்றும். ஆனால் மலம் கழிக்க முடியாது. இம்மாதிரியான நிலையை சந்திக்க நேரிடும்.

பெருங்குடல் புண் இருந்தால், திடீரென்று உங்கள் உடல் எடை குறையும். உடல் எடை எக்காரணமும் இல்லாமல் குறைந்தால் சந்தோஷப்படாமல், மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் அது பெருங்குடல் புண்ணிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

பெருங்குடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தால், காய்ச்சல் மூலம் அறிகுறியை வெளிப்படுத்தும். அதிலும் காய்ச்சலானது 2 நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

பெருங்குடல் புண் இருந்தால், வயிற்றுப்போக்கை சந்திப்பதோடு, வயிற்றுப் போக்கின் போது இரத்தமும் வெளியேறும். அதிலும் இந்த வயிற்றுப்போக்கினால் தூக்கத்தை இழக்க நேரிடும். அந்த அளவில் மோசமாக இருக்கும்.