உங்களுக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் ???

606

உங்களுக்கு இந்த மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்படி இருக்கும் ??? – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

தினமும் இந்த இரண்டையும் ஒண்ணா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்!

ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பல ஜூஸ்கள் உதவியாக இருக்கும். அதில் சிறப்பான ஒரு ஜூஸ் தான் கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்.

இந்த ஜூஸ் கலவை உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

கேரட்டில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கத் தேவையான மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவும் மற்றும் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.

மேலும் கேரட் சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்தி, அளவுக்கு அதிகமான கலோரிகளை உணவு இடைவெளிகளுக்கு இடையே உட்கொள்வதைத் தடுக்கும்.

அதோடு கேரட் இயற்கையாக ஒரு சிறுநீர்ப்பெருக்கி என்பதால், இது சிறுநீரகங்களின் வழியே உடலில் இருந்து அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றத் தூண்டும்.

மேலும் கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 போன்ற க்ளுக்கோஸ், கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்களை உடைத்தெறியத் தேவையான வைட்டமின்கள் உள்ளன.

இவை தசைகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதோடு, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்கச் செய்யும்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, பல்வேறு நோய்களைத் தடுக்கும்.

ஆரஞ்சு பழத்தில் அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்ற உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் கலவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும், இதய நோயைக் கட்டுப்படுத்தும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

இரத்தம் உறைவதைத் தடுக்கும், புற்றுநோயைத் தடுக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், தொற்றுக்களைக் குணப்படுத்தும், கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும், சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்:

  • கேரட் – 2
  • ஆரஞ்சு – 1
  • எலுமிச்சை – 1
  • இஞ்சி – 1-2 இன்ச்
  • தண்ணீர் – 1/4 கப்

செய்முறை:

  • முதலில் நீரில் கேரட் மற்றும் ஆரஞ்சு பழத்தைக் கழுவ வேண்டும்.
  • பின் கேரட்டை துண்டுகளாக்கிக் ஜூஸரில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஆரஞ்சு பழத்தை இரண்டு துண்டுகளாக்கி, ஜூஸ் எடுத்துக் கொண்டு, இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அதில் 1/4 கப் நீரை ஊற்றிக் கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் அதில் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்கும் ஜூஸ் தயார்.

கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் கலவையை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.