உலகின் பணக்கார தமிழன்: யார் அவர்? 5 நிமிடம் படியுங்கள்

420

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் சிவ நாடார் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு இவரது வளர்ச்சி மற்றும் சாதனைகள் ஒரு முன்னுதாரணம்.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான’ இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட்’ (HCL)-இன் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

இந்திய பணக்காரர்கள் பட்டியல் மற்றும் போர்ப்ஸ் நாளிதழின் படி உலக பணக்காரர்களின் பட்டியலிலும் இந்த தமிழர் இடம்பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் 2017 பில்லியனர்கள் பட்டியலில் சிவ நாடார் உலகில் பணக்கார தமிழர் என வெளியிட்டது.

கடந்த ஆண்டு இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 6 ஆம் இடத்தில் இருந்தார்.

போர்ப்ஸ் நாளிதழின்படி இவரது சொத்து மதிப்பி 1,460 கோடி ரூபாய் ஆகும்.

1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூலைபொழி என்ற கிராமத்தில் பிறந்தவர் சிவ நாடார்.

மதுரையில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றினார்.

1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இன்று HCL கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.

தன்னுடைய வாழ்க்கையில் சரியான பாதையை தேர்தெடுத்து, மிக விரைவில் இலக்கினை அடைந்து, குறுகிய காலத்திற்குள் சிவ நாடார் தனது கடின உழைப்பால் புகழின் உச்சியை அடைந்துள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது.
2008ஆம் ஆண்டில், இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையில், இவரின் மகத்தான பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷன் விருதை’ அளித்து கெளரவித்தது.

தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார்.

1996 ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ்.என் என்னும் பொறியியல் கல்லூரியை சென்னையில் தொடங்கினார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.

தன்னை ஒரு தொழிலதிபர் என்பதை விட ஒரு சல்வியாளராக நினைவுகூறுவதையே விரும்புவதாக சிவ நாடார் ஆசைப்படுகிறார்.

இந்த உலசில் சிவ நாடாராக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, இவர் கூறிய பதில் நீங்கள் சிவ நாடாராக வேண்டும் என்றால், உங்களின் தாய் சொல்வதைக் கேட்டாலே போதும் என்று பதிலளித்தார்.