உலகை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் சில கண்டுபிடிப்புகள் ! Amazing Inventions Around The World

227

உலகை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் சில கண்டுபிடிப்புகள் ! Amazing Inventions Around The World – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பல ஆண்டுகளாக வாழைப்பழம், ஆப்பிள் மட்டுமே சாப்பிட்டு வந்த பெண்! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? அதிர்ச்சி புகைப்படம்

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் மட்டும் சாப்பிட்டு வந்ததால், தற்போது அவர் வெறும் 17 கிலோ எடை மட்டுமே இருக்கிறார்.

ரஷ்யாவின் Barnaul பகுதியைச் சேர்ந்தவர் Kristina Karyagina. தற்போது 26 வயதாகும் இவர் தன்னுடைய பள்ளி பருவத்திலிருந்தே சரியாக சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார்.

அதற்கு பதிலாக வாழைப்பழம், ஆப்பிள், தண்ணீர் மற்றும் ஜுஸ் போன்றவைகளையே குடித்து வந்துள்ளார். இதனால் உடல்கள் மெலிந்து மிகவும் பரிதாபமாக காணப்பட்டுள்ளார்.

இது Anorexia நோய் என்று கூறப்படுகிறது. அதாவது நாம் அதிக எடை கொண்டுவிட்டோமோ என்ற பயத்தினால் சரியாக சாப்பிடாமல் இருப்பது, சாப்பிடாமல் இருந்தால், நம்முடைய பழைய நிலைமைக்கு வந்துவிடலாம் என்ற எண்ணம் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் Kristina Karyagina-வின் நிலையை அறிந்த பிரபல டிவி ஸ்டார் Maria Kokhno அவருக்கு உதவ முன்வந்துள்ளார்.

இதனால் சமூகவலைத்தளங்களில் தன்னை பின்பற்றும் சுமார் 520,000-க்கும் மேற்பட்டோருக்கும் Kristina Karyagina-ன் கதையை பகிர்ந்துள்ளார்.

ஏனெனில் Maria Kokhno-வும் இது போன்ற மோசமான நோயை சந்தித்து அதிலிருந்து போராடி வெளியில் வந்தவர் தான், இதன் காரணமாக அதன் வலி என்ன என்பது எனக்கு தெரியும்.

நாம் கண்முன்னே சாப்பாடு இருக்கும் ஆனால் சாப்பிடமுடியாது, இறக்கும் தருவாயில் கூட கண்முன்னே சாப்பாடு இருந்தும் சாப்பிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இவர் எடுத்த முயற்சியின் பயனாக Yan Goland என்ற மருத்துவர் இலவசமாக Kristina Karyagina-க்கு சிகிச்சையளிக்க முன்வந்துள்ளார்.

அவர் கூறுகையில், Kristina Karyagina பார்ப்பதற்கு உயிருள்ள பிணம் போன்று இருக்கிறார். அவர் பேய் படங்களில் நடிக்கலாம், அவரின் தோற்றம் அப்படித் தான் இருக்கிறது என்று கிண்டலாக கூறியுள்ளார்.

இதற்கும் மீறி அவர் சரியான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், ஒரு ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருப்பதே கடினம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் Kristina Karyagina சாப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், இது குறித்து அவரின் அம்மாவிடம் கேட்ட போது, சில தினங்களுக்கு முன் அவள் கஞ்சி சாப்பிட்டதை நான் பார்த்தேன், அதை என் கண்ணாலே நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் Kristina Karyagina-வின் நிலையை கண்ட இணையவாசிகள் அவர் கூடிய விரைவில் நலம் பெற வேண்டும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். Kristina Karyagina தற்போது 17 கிலோ எடைமட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.