எனக்கு மன்னிப்பே கிடையாது.. தினம் தினம் செத்துக் கொண்டிக்கிறேன்! சிறையில் கதறி அழுத அபிராமி

358

குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் சிறையில் உள்ள அபிராமி, தினம் தினம் தூங்காமல் செத்துக்கொண்டிருக்கிறேன் என தன்னை சந்தித்த வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார்.

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து வாழ தனது இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அபிராமியை சிறைக்கு சென்று அவரின் வழக்கறிஞர் சந்தித்து பேசியுள்ளார்.

இது குறித்து கூறிய வழக்கறிஞர், என்னிடம் சில விடயங்களை அபிராமி பேசினார். அதாவது, நான் விஜய்யை காதலித்துதான் திருமணம் செய்தேன்

3500 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருந்த நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம்.

அடிக்கடி குடும்பத்தோடு ஜாலியாக வெளியில் செல்வோம். அப்போது ஒருநாள் சுந்தரம் இருக்கும் பிரியாணி கடைக்கு சென்றோம்.

அவர் என்னை ஸ்பெஷலாக கவனித்தார். அதன்பின்னர் அடிக்கடி பிரியாணி ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து சுந்தரம் கொடுப்பார்.

இப்படி தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

சுந்தரத்தின் பழக்கத்தை என்னால் விடமுடியவில்லை. அவர் சொல்படி நடந்தேன். அவருடன் சேர்ந்து வாழ விருப்பப்பட்டு தான் அந்தத் தவறை செய்துவிட்டேன் என கூறினார்.

குழந்தைகள் கொலையில் சுந்தரத்துக்கு தொடர்புண்டா?’ என்ற கேள்விக்கு, சிறிது நேரம் யோசித்த அபிராமி, இல்லை என்றார்.

அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாமல் ஒவ்வொரு நாள் இரவும் தூங்க முடியாமல் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறேன் என கூறியதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரின் முகத்தில் பதற்றம் தெரிகிறது. தூங்காமல் அவரின் கண்கள் சிவப்பாக காணப்படுகின்றன.

குழந்தைகளைக் கொலை செய்த எனக்கு மன்னிப்பே கிடையாது என அபிராமி அடிக்கடி கூறியதாகவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.