என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க என் செல்லாத்த – ப்ரியா பவானி ஷங்கரை பார்த்து கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்..!

498

நடிகர் கமல்ஹாசன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் 90 வயது இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். மேலும், 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார்.

நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், நடிகைகள் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் சில காட்சிகளில் கமல்ஹாசன் குஜராத்தி மொழி பேசி நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சில காட்சிகள் என்றாலும் அதற்காக குஜராத்தி மொழியையும் ஓரளவு பேச பயிற்சி எடுத்தே அந்த காட்சிகளில் நடிக்கிறார் கமல். இதற்கிடையே, இளசுகளின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக நடிகை சுகன்யா வயதான வேடத்தில் நடித்திருந்தார். இவரது வேடத்தில் தான் பிரியா பவானி ஷங்கர் நடிக்க இருக்கிறாராம்.

இதனை கேட்ட இளசுகள் பலரும் என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க என் செல்லாத்த என்று குமுறி வருகிறார்கள்.