எப்படி இருந்த நபருக்கு, இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியது யார்.? ஒரு கிலோ அரிசி திருடியதற்கு இந்த தண்டனையா..?

495

ஒரு சில தினங்களுக்கு முன், கேரள மாநிலம் அட்டபாடி என்ற ஊரில் வாழும், 27 வயது மதிக்கதக்க மது என்ற  மனநலம்  பாதிக்கபட்ட நபர் அரிசி திருடியதால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது..

மது என்ற இந்த  நபர் அந்த பகுதியில் உள்ள மளிகை கடையில்1 கிலோ அரிசி, 250 கிராம் மிளகு பொடி,உப்பு திருடியதாக கூறி ,அங்குள்ள மக்கள் சரமாரியாக தாக்கி காவலர்களிடம் ஒப்படைத்தனர்..

ஆனால் காவல்நிலையம் போகும் வழியிலே அவர் ரத்த வாந்தியுடன் மயக்கமுற்று விழுந்து ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டார், ஆனால் ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்கு முன் இறந்து போனார்.

இன்னிலையில் மதுவிடம்  ஊர் மக்கள் விசாரணை செய்வது ,அவர் கையில் இருந்த பையை செக் செய்வது, அவருடன் தாக்கிய நிலையில் செல்பி எடுப்பது போன்ற காணொளிகள் இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள், சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

இறந்த வாலிபருக்காக கேரளா இளைஞர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. குற்றவாளிகளை உடனே கைது செய்ய கேரள அரசு உத்தரவிட்டுள்ளது….இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது

தற்போது இவரது இளமை காலத்தில் எடுத்த போட்டோ ஒன்று வைரலாக ஆரம்பித்துள்ளது