கடைசி வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்த பழம்பெரும் தமிழ் நடிகை உயிழப்பு!

268

எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் இணைந்து நடித்த பழம்பெரும் தமிழ்நடிகை குசலகுமாரி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவில் இருபெரும் துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி முதன்முதலாக இணைந்து நடித்த படம் கூண்டுக்கிளி. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை குசலகுமாரி (83).

மன்மத லீலை, பராசக்தி, கொஞ்சும் சலங்கை, போன மச்சான் திரும்பி வந்தான், அரிச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்ததோடு 250 படங்களுக்கு மேல் நடனமாடி இருக்கிறார்.

இவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தெரியவந்ததும், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் மாதம்தோறும் ரூ.5000 கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தன்னுடைய சகோதரன் சுந்தரம் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்த குசலகுமாரி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.