கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து எரித்து கொன்ற மனைவி… தற்கொலை என நாடகமாடியது அம்பலம்

364

தமிழகத்தில் கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து எரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் மத்து மடக்கி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன்.

இவர் மனைவி மஞ்சுளா. குணசேகரன் குடிக்கு அடிமையானதால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கணவரை பிரிந்த மஞ்சுளா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் மனைவியை அழைத்து வர போதையில் சென்ற குணசேகரன் அவர் குடும்பத்தாருடன் சண்டை போட்டுள்ளார்.

பின்னர் ஆத்திரமடைந்த மஞ்சுளா மற்றும் அவர் குடும்பத்தார் குணசேகரனை அடித்து உதைத்ததில் அவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார்.

அவர் இறந்துவிட்டதாக கருதிய மஞ்சுளா மற்றும் குடும்பத்தார், குணசேகரன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து எரித்து கொன்றனர்.

பின்னர் குணசேகரன் தானே தீவைத்து கொண்டதாக ஊர் மக்களிடம் நாடகமாடினர்.

இதன்பின்னர் இறுதிச்சடங்கு நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் குணசேகரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவர் அக்கா பழமலை பொலிசில் புகார் செய்தார்.

இதையடுத்து பொலிசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு மஞ்சுளா மற்றும் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.