கனடாவில் உயர்ந்த சம்பளத்துடன் வேலை தேடுகின்றீர்களா? அப்படியானால் இந்த அறிவிப்பை பாருங்கள்…

896

கனடாவில் வருடமொன்றிற்கு 30,000 முதல் 36,000டொலர்கள் வரையிலான சம்பளம் வேண்டுமா?

நீங்கள் புகை பிடிக்காதவராக, அமைதியை விரும்புபவராகவும், அமைதியாக இருப்பவரும், ஊனமுற்ற வயோதிபரை கவனித்து கொள்ள விரும்பினால் அதிஷ்டம் உங்களிற்கு.

செய்ய வேண்டியது விறகு சேர்ப்பது உணவு தயாரிப்பது. எதிர்கால வாடகை பற்றிய கவலை கொள்ள வேண்டிதில்லை.நோவ ஸ்கோசிய கேப் பிரெட்டனில் ஒரு கிராம புறத்தில் மனிதனொருவர் தன்னுடன் வசிக்க விரும்பும் ஒருவருக்கு இந்த சலுகைகளை வழங்க முன்வந்துள்ளார்.

தன்னுடன் வசிக்க சரியான ஒருவரை தேட இணையத்தை தெரிந்தெடுத்துள்ளார்.75வயதுடைய ரெறொன் டொட் என்பவர் சக்கர நாற்காலியில் இருப்பவர்  நோவ ஸ்கோசியாவில் உள்ள தனது 100 ஏக்கர் சொத்துடன் தன்னுடன் இருக்க ஒருவரை தேடுகின்றார்.

கிஜியில் விளம்பரம் செய்ததை தொடர்ந்து கடந்த ஆறு நாட்களில் 40,000ற்கும் மேற்பட்ட தடவைகள் இவரது விளம்பரம் பார்வையிடப்பட்டுள்ளது.தனிப்பட்ட கவனிப்பிற்கான தராதர பட்டியல் மிக நீண்டதாக விளம்பரம் தெரிவிக்கின்றது.

முக்கியமாக வெளிக்களங்களை விரும்புதல் அமைவதுடன், செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், தோட்டவேலை, சமையல், மற்றும் சுத்தம் செய்யும் தகைமை மற்றும் 50-இறாத்தல் பாரம் தூக்கும் திறன் போன்றனவும் அடங்குகின்றன.

தனிப்பட்ட விளம்பரத்தில் வருடாந்த சம்பளம் டொலர்கள் 30,000ற்கும் டொலர்கள் 36,000ற்கும் இடைப்பட்ட தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவாகும் போட்டியாளர், தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இரண்டு படுக்கை அறைகள், ஒரு மாடி மற்றும் குளியலறை ஒன்றையும் பெறுவர் எனவும், அந்த முதியவர்  வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.