கமல்ஹாசன் கட்சியில் அம்பலமான நடிகர் மனைவியின் முகம்: சாப்பாட்டுக்கு வழியின்றி தவிக்கும் பெற்றோர்

497

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்டக்குழு உறுப்பினரும், மத்திய சென்னை தொகுதி வேட்பாளருமான நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் மீது சமூகவலைதளங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டை கமல்ஹாசன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என விமர்சனம் எழுந்துள்ளது,

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டதில் இருந்தே நாசர் மனைவி கமீலா நாசரும் கமல்ஹாசனுடன் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் வருகின்ற மக்களவை தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளாராகும் வாய்ப்பை வழங்கினார் கமல்ஹாசன்.

இவர்களை சிரமப்பட்டு கவனித்துக் கொள்கிறார், நாசர் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, இவர்களை கண்டு கொள்வதே இல்லை, வந்து பார்ப்பதும் கூட இல்லை, இதற்கு முக்கிய காரணம் நாசரின் மனைவி கமீலா நாசர் தான், வீட்டையே கவனிக்காதவர் எப்படி நாட்டைக் கவனிப்பார்? pic.twitter.com/FiGPN8pQLX

நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மெகபூப் பாஷா இன்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்களைப் பகிந்திருக்கிறார். நாசரின் பெற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட கடைசி தம்பி ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஜவகர் மெகபூப் பாஷா ,செங்கல்பட்டில் வசிக்கும் இவர்கள் தங்களின் அடிப்படை தேவைக்கும், அன்றாட சாப்பாட்டுக்கும் சிரமப்படும் வறுமை நிலையில் உள்ளனர்.

கழிப்பறை வசதி கூட இல்லாத வீட்டில் தான் வெகுகாலமாக வசித்து வந்திருக்கின்றனர். சமீபமாகத் தான் கழிவறை வசதி செய்யப்பட்டது.

இவர்களுக்கென்று நடிகர் நாசர் இதுவரை எந்த உதவியும் செய்ததில்லை.

இதற்கு காரணம் கமீலா நாசர் தான். சொந்த வீட்டை பார்த்துக் கொள்ளாத இவர்களா நாட்டைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பற்றி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை ஹொட்டலில் வேலை பார்த்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என நாசரின் இரண்டாவது சகோதரர் தெரிவித்துள்ளார்.

தனது கட்சி வேட்பாளர் கமீலா மீதான இந்த புகாரை கமல்ஹாசன் கண்டுகொள்வாரா என கேள்வி எழுந்துள்ளது.