கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடாதது ஏன்? வெளியான காரணம்

592

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் போட்டியிடாததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை அறிவித்துள்ள கமல்ஹாசன், ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதுதான் கமல்ஹாசனின் முதல் இலக்கு.

கட்சி தொடங்கி ஓராண்டு மட்டுமே ஆவதால், கட்டமைப்பு, வாக்கு பலம் குறித்து கணிக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில், கட்சியின் தலைவர் தோல்வியை சந்திக்கும் நிலை உருவானால், அடுத்து வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்.

எனவே, மக்களவைத் தேர்தலில் கமல் போட்டியிடாமல் தவிர்ப்பது நல்லது என்று தனது நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார் கமல்ஹாசன்.

சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்களிடம் போய் வாக்கு கேட்கும் போது எந்த சிக்கலோ, தர்மசங்கடமோ ஏற்படக் கூடாது என்றுதான் தற்போது கூட்டணி விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தார்.