கழிவறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து சிறுமியை கொடுமைப்படுத்திய தம்பதி

148

அமெரிக்காவில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பல விதங்களில் கொடுமைப்படுத்திய தம்பதியினர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த டெர்ரி நோப் (46) – ரேலெய்ன் நோப் (43) என்கிற தம்பதியினர் மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பல்வேறு விதங்களில் கொடுமை படுத்தியுள்ளனர்.

தற்போது 22 வயதாகும் இளம்பெண்ணின் தாய் 2015ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியிடம் இருந்து 8,000 டொலர்களை பறித்துக்கொண்ட தம்பதி, வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இறந்த அவருடைய தாயின் அஸ்தியை சாப்பிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். வீட்டை சுற்றிலும் இருக்கும் புற்களை வெட்டுவது மற்றும் கழிவறையை நாக்கால் சுத்தம் செய்வது என தினமும் வேலை கொடுத்துள்ளனர்.

அதனை செய்ய தவறினால் இரும்பு கம்பி போன்ற பொருட்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூரத்திலிருந்து தப்ப முயன்ற சிறுமியை கடுமையாக தாக்கி, கோழிகள் இருக்கும் குடிசைக்குள் போட்டு அடைத்துள்ளனர்.

அதோடு இல்லாமல் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு, பாலியல் பொருளாகவும் சிறுமியை பயன்படுத்தியுள்ளனர். தம்பதியினரை போன்று அவர்களுடைய 24 வயதான மகன் ஜோடி லாம்பர்ட், மகள்கள் பிரிட்ஜெட் லம்பேர்ட் (22) மற்றும் டெய்லர் நோப் (21) ஆகியோரும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார். குற்றம் சுமத்தப்பட்ட தம்பதியினருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிகஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே போல் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.