காதலித்து மகளை திருமணம் செய்த இளைஞன்… வீட்டிற்கு வரவழைத்து தந்தை செய்த மோசமான செயல்

126

தமிழகத்தில் சீர்திருத்த முறையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞனை வீட்டிற்கு வரவழைத்து, பெண்ணின் தந்தை அவரை அடித்து விரட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் போத்தனூரை சேர்ந்தவர் ஜீவாஜெய்சன். இவர் தன்னோடு கல்லூரியில் படித்த வடவள்ளியைச் சேர்ந்த பெண்ணை சீர்திருத்த முறையில் கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணம் காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், பெற்றோர் சம்மதம் தெரிவித்தவுடன் வருவதாக கூறி தாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு, தற்போது மாப்பிள்ளை பார்த்துள்ளனர்.

இதனால் உண்மை அறிந்த அப்பெண், தன் கணவன் ஜீவாஜெய்சன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் இதுகுறித்து, பெண் வீட்டாருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இருவரையும் தாம் சேர்த்து வைப்பதாக கூறிய பெண்ணின் தந்தை ராஜகோபால், ஆசை வார்த்தை கூறி வடவள்ளிக்கு வரவழைத்துள்ளார்.

முதலில் நன்றாக பேசிய பெண்ணின் தந்தை, உறவினர்கள் வந்தவுடன், இளைஞர் ஜீவா ஜெய்சனை சரமாரியாக அடித்து துரத்தியுள்ளார்.

அவரது கார் மற்றும் செல்போனையும் அவர்கள் பறித்து வைத்துள்ளனர். தப்பிவந்த ஜீவாஜெய்சன், தமது மனைவியை வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, தம்மை அடித்து துரத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.