சிறையிலிருந்து வெளியில் வரும் சசிகலா

287

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா இன்னும் 2 மாதங்களில் வெளியே வருவார் என அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் தோழியும், அமமுக பொதுச்செயலாளருமான சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் சசிகலா வெளியில் வருகிறார் என அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அமமுக செயல்பாடு நன்றாக இருக்கிறது என்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள்.

சசிகலா இன்னும் 2 மாதங்களில் சிறையிலிருந்து வெளியே வரப்போகிறார் என கூறியுள்ளார்.