சுந்தர்பிச்சை முதன் முதலில் செய்த வேலை என்ன தெரியுமா? சோகமான வாழ்க்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

579

கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை இன்று உலகின் மிக வெற்றிகரமான நபர்களில் ஒருவராவார்.
சுந்தர் பிச்சை இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) கரக்பூரில் படிக்கும் போது தான் சந்தித்த அஞ்சலியை பின்னர் திருமணம் செய்துகொண்டார்.

அவர்கள் இவரும் அங்கு மெட்டலார்ஜிகல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்தனர். அவர்களின் பொறியியல் இறுதி ஆண்டில், அஞ்சலியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார்.

sundar pichai anjali pichai க்கான பட முடிவு

சிறிதும் யோசிக்காமல் சட்டென சரி என்று கூறினார் அஞ்சலி. இதில் சிறந்த பகுதி என்னவெனில், சுந்தரைப் பற்றி முழுதும் அறிந்து வைத்திருந்த அஞ்சலி, அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என தெரிந்தும் அவருடன் வாழ்க்கை முழுதும் பயணிக்க முடிவெடுத்தார்.

பின்னர் சுந்தர் பிச்சை தனது உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற நிலையில், அஞ்சலியை இந்தியாவிலேயே விட்டுச் சென்றார்.

ஆனாலும் அவர்கள் தங்கள் காதலை விட்டுவிடவில்லை. அக்காலகட்டத்தில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது மிகவும் விலையுயர்ந்த ஒன்றாக இருந்ததால், அஞ்சலியுடன் ஆறு மாதங்கள் பேச முடியவில்லை என பின்னாளில் ஒரு பேட்டியில் சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார்.

daughter sundar pichai family க்கான பட முடிவு

விரைவில் அஞ்சலி அமெரிக்காவிற்கு சென்று சுந்தருடன் சேர்ந்தார். அதுநேரம் சுந்தரும் அங்கு ஒரு வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெற்றார்.

அஞ்சலியின் பெற்றோரிடமிருந்து அனுமதிபெற்ற பின்னர் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது. திருமணத்திற்குப் பிறகு, இருவரும் அமெரிக்காவில் குடியேறினர்.

பிச்சை கூகுளில் பணியாற்றும் போது, பல்வேறு பிராண்டட் நிறுவனங்களில் இருந்து பணியாற்ற வாய்ப்புகள் வந்தபோதும் அஞ்சலி அவரை கூகுள் நிறுவனத்திலேயே தொடர அறிவுறுத்தியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

இப்போது அவர் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

sundar pichai wife and son க்கான பட முடிவு

சுந்தர் பிச்சை மற்றும் அஞ்சலி தம்பதியினருக்கு, காவியா மற்றும் கிரண் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

சென்னையில் துவங்கி கூகுள் வரை சென்றிருக்கும் இவரது வாழ்க்கை பயணத்தில் பலருக்கும் தெரிந்திராத பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது.

இவர் சென்னையை சேர்ந்தவர். ஐஐடி கராக்பூரில் பொறியியல் பட்டம் பெற்றவர். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்எஸ் மற்றும் வார்டன் பிஸினஸ் பள்ளியில் எம்பிஏ பெற்றவர். இவரது மனைவி அஞ்சலி பிச்சையை இவர் ஐஐட்- கேஜிபி’யில் சந்தித்தார். இரண்டு குழந்தைகளுடன் கலிஃபோர்னியாவில் அல்டாஸ் இல்லத்தில் தற்பொழுது வசிக்கின்றனர்.

முதல் வேலை

இவரது முதல் வேலையிலேயே இவரது கவர்திழுக்கும் தலைமைத்தன்மையை காட்டி உள்ளார்.

சிறிய வெப் பிரவுஸர் எக்ஸ்டென்ஷனை டெவலப் செய்யும் வேலைதான் முதலில் இவருக்கு அளிக்கப்பட்டது அதாவது googol toolbar. இதை முடித்தபின் இவரது தலைமை அதிகாரியான எரிக் ஸ்மிக்ட்’ஐ வியக்கவைத்து. அதன் பின் க்ரோம் பிரவுஸரின் வளர்ச்சியில் இறங்கினார்.

இதன் வழியில் இவரது வெற்றி க்ரோம் இயங்குதளத்தில் வந்து நின்றது.