தமிழர் தாயகப் பிரதேசங்களில் வாழும் பொதுமக்களுக்கு வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை…!

328

வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் உக்கிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இலங்கை முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் வீசும் காற்று மேலும் உக்கிரமடையும் எனவும் அந்தத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதனால், மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோரை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.