தயவு செய்து அப்படி சொல்லாதீங்க! வருத்தமா இருக்கு: சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற தமிழன் வேதனை

546

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்களுக்கு வேண்டும் என்றே முதல் பரிசு கொடுக்கப்பட்டதாக எழுந்து வரும் விமர்சனங்கள் தங்களை வருத்தமடைய வைத்துள்ளதாக வெற்றியாளர் செந்தில் கூறியுள்ளார்.

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்று நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. தமிழகம் மட்டுமின்றி இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு தேர்வானவர்கள் தான் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ராஜலட்சுமி-செந்தில்.

இந்த தம்பதி தங்களுடைய நாட்டுப் புற பாடல்கள் மூலம் ரசிகர்களின் பலரது கவனத்தை ஈர்த்தனர்.

இதில் செந்தில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 50,00,00 ரூபாய்க்கான முதல் பரிசை வென்றார். அப்போது ராஜலட்சுமி தனக்கு கொடுத்த சிறப்பு பரிசு 5 லட்சம் ரூபாயை நெசவாளர்களின் குழந்தைகளின் படிப்புக்கு அப்படியே கொடுத்தார்.

இந்நிலையில் குறித்த தொலைக்காட்சி தன்னுடைய டி.ஆர்.பி ரேட்டிங்கிறாக செந்திலுக்கு முதல் பரிசு கொடுத்துள்ளதாகவும், இவர்கள் ஆடிசன் இல்லாமலே போட்டியில் பங்கு பெற்றவர்கள் என்று கூறப்பட்டு வந்தது.

தங்களுடைய திறமையால் பலரது மனங்களை வென்ற இவர்களிடம் இதைப் பற்றி பிரபல தமிழ் ஊடகம் ஒன்று கேட்டுள்ளது.

அதற்கு இரண்டு பேரும், ஆம் நாங்கள் கேள்விபட்டிருக்கிறோம். மக்கள் நிகழ்ச்சியை அதிகம் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்களை ஏமாற்றி பார்க்க வைக்க முடியாது.

காரணம் தற்போது டிஜிட்டல் உலகத்தில் இருக்கிறோம். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் உண்மையாக நடக்கிறதுக்கும், செட் பண்றதுக்கும் உள்ள வித்தியாசம் மக்களுக்கு புரியும்.

எதிலும் புதுமை தமிழன் பெருமை, தமிழை உயர்த்திப் பிடிப்பதன் தொடர்ச்சியாகவே, குறித்த தொலைக்காட்சி உங்களை வெற்றியாளராக ஆக்கியிருக்கிறது என்று குறித்து கேட்ட போது,

தமிழ் பாரம்பரிய இசைக்கு ஒரு வாய்ப்பு தரலாம் என்ற நோக்கில் சூப்பர் சிங்கர் மேடை நினைத்திருக்கலாம், ஆனால், நானும் சரி என் மனைவியும் சரி, ஆடிசன் மூலமாகவே தேர்வாகி வந்தோம்.

அதேபோல எங்க திறமையைப் பார்த்து மக்கள் எங்களுக்குத் தந்த ஆதரவும் பெரியது. எங்களுக்கு டைட்டில் வேண்டும் என்றே கொடுக்கப்பட்டதாக எழுந்த விமர்சனம் வருத்தமாக இருக்கிறது.

அப்படி சொல்லதீங்க, கர்நாடக இசையோ, மக்களிசையோ இறுதிப் போட்டியில் நடுவர்கள் வழங்குகிற மதிப்பெண்களை விட பொதுமக்களின் வாக்குக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சியில் கடைபிடித்து வந்தார்கள்.

இதை நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும் என்று இருவரும் கூறியுள்ளனர்.