தயாரிப்பாளரால் தடம்மாறிய நடிகை… இறுதியில் கொடூரமாக இறந்த அவலம்

1111

1980களில் மிகவும் பிரபமாக இருந்தவர் நிஷா. இவர் கமலுடன் டிக் டிக் டிக் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதோடு ரஜினிக்கு ஜோடியாகவும் கூட நடித்துள்ளார்.

பல ஹிட் படங்களை கொடுத்த இவர் திடீரென படத்தில் நடிப்பதை நிறுத்தினார். தயாரிப்பாளர் ஒருவர் நிஷாவை கட்டாயப்படுத்தி விபசார தொழிலில் ஈடுபடுத்தியதால் அவர் நடிக்கவில்லை என்று அப்போது கூறப்பட்டது.

பாலியல் தொழில் விவகாரம் தெரிந்த இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லை. தயாரிப்பாளரால் தடம்மாறி போன நிஷா எங்கே போனார் என்றே தெரியாமல் இருந்தது.

பல ஆண்டுகள் கழித்து நாகை அருகே உள்ள தர்கா ஒன்றுக்கு வெளியே சாலையோரம் எலும்பு கூடு போன்ற நிலையில் பரிதாபமாக படுத்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எய்ட்ஸ் காரணமாக நிஷாவின் உடலில் புழுக்கள் மற்றும் எறும்புகள் ஓடிக்கொண்டிருந்தன. சில சமூக ஆர்வலர்கள் இவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் எய்ட்ஸ் நோய் முற்றிய நிலையில் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.