தாங்கள் ஓடி விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்படும் அண்ணனும் தங்கையும்: இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்கள்!

865

தங்களுக்கு மிகவும் பிடித்தமான, ஐந்து மாதங்களுக்கு முன்வரை கூட ஓடி விளையாடிய அதே கடற்கரையின் அருகிலேயே இன்று புதைக்கப்பட இருக்கிறார்கள் இலங்கை குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட ஒரு பிரித்தானிய அண்ணனும் தங்கையும்.

இலங்கை குண்டு வெடிப்பில் தங்கள் தந்தையின் கண் முன்னேயே பலியான டேனியலும் (19) அவரது அன்புத் தங்கை அமெலியும் (15), தங்கள் தந்தை பிறந்த அமெரிக்காவிலுள்ள கலிபோர்னிய கடற்கரையின் அருகே புதைக்கப்பட இருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் செய்வது போலவே, கடந்த டிசம்பர் மாதமும் மகிழ்ச்சியான ஒரு கிறிஸ்துமஸ் விடுமுறையை அவர்கள் கலிபோர்னியாவின் நியூபோர்ட் கடற்கரையில்தான் கொண்டாடினார்கள்.

அவர்களது தந்தை அமெரிக்காவில் பிறந்தவர் என்பதோடு, டேனியலும், அமெலியும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இரட்டைக் குடியுரிமைகள் என்பதாலும், அவர்களுக்கு மிகவும் பிடித்த விடுமுறையைக் கொண்டாடும் இடம் என்பதாலும் அவர்கள் அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.

பிள்ளைகளின் சகோதரான டேவிட், நியூபோர்ட் கடற்கரையில் நாங்கள் பல மகிழ்ச்சியான தருணங்களை அனுபவித்திருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் விடுமுறைக்கு நாங்கள் அங்குதான் செல்வோம், அங்குதான் எங்கள் பாட்டியும் வாழ்ந்தார்கள், மிகவும் அமைதியான ஒரு இடம் அது என்கிறார்.

பயங்கரமான வன்முறைக்கு பலியான தங்கள் பிள்ளைகளை, கடைசியாக அவர்களுக்கு அமைதியைக் கொடுக்கும் ஒரு இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளது அவர்களது குடும்பம்.