திருமணமான 3 நாளில் நடந்த துயர சம்பவம்… மனைவியை கட்டிப்பிடித்து கதறி அழுத கணவன்

322

தமிழகத்தில் திருமணமாகி மூன்று நாட்களே ஆன நிலையில், மனைவி விபத்தில் இறந்ததால், கணவன் அவரை கட்டிப் பிடித்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.

வாணியம்பாடி பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் திவ்யா(24) என்ற பெண்ணிற்கும் கடந்த 1-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை புதுமணத் தம்பதி இரு சக்கர வாகனத்தில் ஏலகிரி மலைக்கு சுற்றி பார்க்க சென்றுள்ளனர்.

அதன் பின் மாலை நேரத்தில் மலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர்.

அப்போது 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, கார் ஒன்று எதிரே வேகமாக வந்ததால், இதைக் கண்ட மணிகண்டன் நிலைதடுமாறி, இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார்.

அதற்கு அங்கிருந்த தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதால், இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் திவ்யா அங்கிருந்த சுவற்றின் மேல் பலமாக மோதியதால், சில வினாடிகளிலே உயிரிழந்தார்.

மனைவி கண்முன் உயிரிழந்ததைக் கண்ட மணிகண்ட, காயத்தோடு எழுந்து வந்து திவ்யாவை கட்டிப்பிடித்து உனக்கு பதில் என் உயிர் போயிருக்க கூடாதா கதறி அழுதார்.

இதைக் கணட அங்கிருந்த பொதுமக்கள் கண்கலங்கினர். எவ்வளவு கூறியும், திவ்யாவை மணிகண்டன் விடவே இல்லை, கட்டிப்பிடித்து அழது கொண்டிருந்தார் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், திவ்யாவின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.