தொடையில் உள்ள கருமை நீங்க இதை மட்டும் கலந்து தடவுங்கள் – அனைவருக்கும் பகிருங்கள்.

744

தொடையில் உள்ள கருமை நீங்க இதை மட்டும் கலந்து தடவுங்கள் – அனைவருக்கும் பகிருங்கள்.– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

5 நிமிஷம் வாய்விட்டு சிரிக்கணுமா? வாங்க இந்த போட்டோ கலக்ஷன் பாருங்க!

உங்க நாளா கொஞ்சம் கலகலன்னு ஆரம்பிக்க இந்த புகைப்படத் தொகுப்பு ஒரு சரியான தேர்வா இருக்கும்.

இந்த தொகுபுல நம்ம அரசாங்கத்தோட வேற லெவல் புத்திக்கூர்மை, இந்திய மக்களோட வேற லெவல் கிரியேட்டிவிட்டின்னு நம்ம பல விஷயங்கள பார்க்க போறோம். இதுல காலம், காலமாக கூகுள்ல இருக்க சில படங்கள் நம்ம நடப்பு

அரசோடவும் கொஞ்சம் ஒத்துப் போறத பாக்கும் போது… அட… ! இதுக்கு பேரு தான் தற்செயலா நடக்குறதோ…ன்னு யோசிக்க வைக்குது.

சரி! வாங்க இனி போட்டோஸ் பார்க்கலாம்…

இதுக்கு தானா?
இதுக்கு தானா?
இப்படியான தரமான சாலைகளுக்கு தான் நம்ம இந்திய அரசாங்கள், சாலைவரி, சுங்கச்சாவடி வரின்னு பலவகையில நம்மக்கிட்ட பணம் வசூலிக்குது. எனக்கு என்ன ஒரே ஒரு டவுட்டுன்னா சார்… நம்ம வண்டிய இந்திய சாலையில ஓட்ட தான சாலை வரி கட்டுறோம்… அப்பறம் எடுத்து தனியா சுங்கச்சாவடி வசூல்? நம்மக்கிட்ட இருந்து வாங்குற பணத்துல இவங்க தரமான ரோடே போடுறது இல்ல… அப்பறம் எதுக்கு சாலை வரி..?

காதல்ன்னு வந்துட்டா...

காதல்ன்னு வந்துட்டா…
நம்ம பயலுக காதல்ன்னு வந்துட்டா மா.ரோ.சூ.சொ. எல்லாத்தையும் பட்டத்துல காட்டு வானத்துல பறக்கவிட்டுடுவாங்க… அதுக்கு ஒரு சாம்பிள் தான் நம்ம பய! இதுக்கும் மேல அந்த பொண்ணு ஒத்துக்காட்டி அங்கபிரதட்சணம் பண்ணிடுவான் போலயே!

டிக்கெட் விலை ஏத்துனா மட்டும் போதுமா?

டிக்கெட் விலை ஏத்துனா மட்டும் போதுமா?
பஸ் டிக்கெட் விலை ஏத்துனா மட்டும் போதுமா, குறைந்தபட்சம் பஸ் டிரைவர் சீட்டு பக்கமாவது மழை பேஞ்சா ஒழுகாத மாதிரி தாப்பாய் போட்டு மேலே பூசு வேலை பாத்திருக்கலாம்ல. பாவம் அவரு குடையப் பிடிப்பார இல்ல ஸ்டேரிங் பிடிச்சு வண்டி ஓட்டுவாரா?

பலே, பலே!

பலே, பலே!
லோடர் வண்டியில இப்படியும் நீராடலாம்ன்னு கண்டுபிடிச்ச விஞ்ஞானி நம்மாளுக தான். இதுமட்டும் இல்ல, லோடர் வண்டியில திருமண மக்கள் வரவேற்ப்புக்கு கூட பயன்படுத்தலாம்ன்னு இந்த உலகத்துக்கு கத்துக்கொடுத்தவங்க நம்ம ஆட்கள் தான்.

நட்பே சிறந்த உறவு!

நட்பே சிறந்த உறவு!
ஆக்சிடென்ட் ஆனாலும் சரக்கு ட்ரீட் கேக்குறவன் சாதா ஃபிரெண்ட். சாக கிடக்கும் போதும், ஒரு கட்டிங் போடுறியா மச்சான்னு கேட்குறவன் தான் ஸ்பெஷல் சாதா ஃபிரெண்ட். பயப்பக்கிங்க என்ன வேலை பார்த்து வெச்சிருக்குங்க!

நியூயார்க்???

நியூயார்க்???
நம்ம அரசாங்க ஊழியர்கள் எப்பவும் மக்களுக்கு உதவுற மாறியான உபயோகமான வேலை தான் செய்வாங்க. பெர்ம்பாலும் அமெரிக்கா போற பணக்காரங்க விமானத்துல தான் போவாங்க அதனால, நியூயார்க் எத்தன தூரத்துல இருக்குன்னு அவங்க கவலைப்பட வேண்டிய கட்டாயம் இல்ல. ஆனால், ஏழைங்களுக்கு அப்படியா, அவங்க பொடிநடையாகவோ, சைக்கிள்ளயோ தான் போவாங்க. அப்படி போறவங்களுக்கு இப்படியான மைல்கல் கட்டாயம் வேணும் அல்லவா? அதுக்கு தான் இத நட்டு வெச்சிருக்காங்க!

இந்நிலை வரலாம் வெகுவிரைவில்...

இந்நிலை வரலாம் வெகுவிரைவில்…
கேப்டவுன் துவக்க புள்ளியா அமைஞ்சிருக்கு. வேதனையான விஷயம் தான். குறிப்பிட்ட ஒரு தேதிக்கு அப்பறம் மொத்த ஊருக்கும் ஒரு சொட்டு தண்ணி கூட கிடைக்காதுங்கிறது எவ்வளவு வேதனையான விஷயம்.

தண்ணிய சேமிக்க மறந்துட்ட அப்பறம் இந்த நிலைமை தான். சொந்த சிறுநீரையே பிடிச்சு சுத்திகரிச்சு குடிக்கிற நிலைமை தான் வரும்.

ஆதி காலம் முதல்!

ஆதி காலம் முதல்!
இன்டர்நெட் துவங்கி கேலியான படங்கள் பகிரப்பட்ட காலத்தில் இருந்து, ஃபேஸ்புக், ட்விட்டர் பிறந்த காலத்தில் இருந்து இந்த படம் மிகவும் பிரபலம். சிலர் கேலியாகவும், சிலர் அந்த நாயை தூக்கி பெண்மணியை திட்டியும் கூட பலமுறை பகிர்ந்துள்ளனர்.

ஏன், நம்ம ஊர்களிலேயே நாய்களை செல்லமாக மனிதர்கள் பெயர் வைத்தும், பிள்ளைகளை செல்லமாக நாய்களுக்கு வைக்கும் பெயர்களை வைத்தும் தானே அழைக்கிறோம். எல்லாம் தலைவிதி!!!

புத்திசாலிங்க!

புத்திசாலிங்க!
ஊரு, உலகத்துல இருக்க எல்லா புத்திசாலிங்களும் ஒரே நாட்டுல இருந்துட்டா இதுதான் பிரச்சனை. பூக்கள் சரி, மரத்தையுமா? மரத்த எப்படியா பிடுங்க முடியும்? எச்சரிக்கை பலகை வைக்கிறதுல ஆபீசர்ஸ்க்கு இருந்து எச்சரிக்கை, அத சரியா எழுதுனம்ங்கிறதுல எச்சரிக்கையா இருக்க வேண்டாமா?

அற்புதம்!

அற்புதம்!
சப்வே மூலமா எந்த வழியில போனா, எந்த இடத்துக்கு போகலாம்ன்னு நல்லா போர்டு வெச்சு காமிச்சிருக்கீங்க. எல்லாம் சரி, அந்த படம் பார்க்க எப்படி இருக்குன்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா மிஸ்டர் ஆபீசர். உங்க கிரியேட்டிவிட்டிய காண்பிக்க வேற இடமே இல்லையா…?

அடிச்சா தான் தப்பு...

அடிச்சா தான் தப்பு…
தமிழன் படத்துல… சிகரெட் பிடிச்சா தான் தப்பு, சும்மா வெச்சிருந்தா தப்பில்லையே என்று விஜய் வசனம் பேசுவது போல இருக்கும். அதே போல தான் இந்த முதியவரும் செய்திருக்கிறார். சத்தமா ஹாரன் அடிச்சா தான் தப்பு. அதே இடத்துல ஹாரன (டிரம்பெட்) விற்பதில் தப்பில்லையே என்று தனது கடையை விரித்து விற்க துவங்கிவிட்டார் அண்ணாச்சி!

தப்பு மை சன்!

தப்பு மை சன்!
உன்ன சேர்க்கையில விடாதது தப்பு தான்… ஆனா இப்படி வெளிநாட்டுக் காரங்க முன்னாடி உன்னோட வீரியத்த காண்பிக்கிறது தப்பு. அதுவும் தோள் மேல மூணு பேர உட்கார வெச்சுட்டு செய்யிறது எல்லாம் தப்பு மை சன்!

நார்த் சைடு மம்மி!

நார்த் சைடு மம்மி!
குழந்தை சாப்பிடாம அடம் பிடிச்சா.. தாலாட்டி, பாட்டு பாடி, கார்டூன் காண்பிச்சு சாப்பாடு ஊட்டனும். அதவிட்டுட்டு, குழந்தையவே தட்டுல வெச்சு சப்பாத்தியோட சேர்த்து போர்வையா மடிச்சு வெச்சு டார்ச்சர் பண்றது எல்லாம் யார் சொல்லிகொடுத்தது?

நீயெல்லாம் மம்மியா?

நீயெல்லாம் மம்மியா?
அந்த நார்த் இந்தியன் மம்மியாவது காஞ்சுபோன சப்பாத்திய போர்வையா போட்டு தான் டார்ச்சர் பண்ணா. அந்த ஈவிரக்கமாவது உனக்கு வேணாம். சுடுதண்ணி பாத்திரத்துல என்ன போட்டு வேகவைக்கிறியே நீயெல்லாம் தயா, இல்ல பேயா… நல்ல வேலை அடுப்பு ஆன்ல இல்ல. இருந்திருந்தா… என் கதி என்ன ஆவுறது?

போலீஸ்னா சும்மா இல்லடா...

போலீஸ்னா சும்மா இல்லடா…
வண்டி ஓட்டும் போது ஒரு கைல போன் பேசிட்டே ஓட்டுறது தான் சட்டப்படி குற்றம். இப்படீக்கா லிப்லாக் பொசிஷன்ல ஹெல்மெட்டோட முட்டுக்கொடுத்து பேசுறது தப்பில்லன்னு தன்னோட சமயோசித புத்திக்கூர்மைய வெச்சு யோசிச்சு இருக்கார் நம்ம தமிநாட்டு போலீஸ்கார்! போலீஸ்னா சும்மா இல்லடா…!!!

கேரளம், கேரளம்தான்!

கேரளம், கேரளம்தான்!
கேரளாக்காரங்களுக்கு வாழை பழம்னா ரொம்ப பிடிக்கும்னு தெரியும். அதும் அவங்க போடுற பழ பஜ்ஜி, சிப்ஸ் எல்லாம் வேற எங்கையும் கிடைக்காத அற்புதமான டெஸ்ட் கொண்ட உணவு வகைகள். ஆனாலும், வாழைப் பழத்தோட இவங்க இவ்வளோ ஒத்துணர்வு கொண்டிருப்பாங்கன்னு நெனச்சு பார்க்கல… இப்படி ஒரு குடை…??? எப்படி சாரே… உங்களுக்கு மட்டும் தோனுச்சு…?

நல்ல ஐடியா!

நல்ல ஐடியா!
கோழி வளர்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும், அது கண்ட இடத்தில் கழிந்து தள்ளும் என்று. அதுக்குன்னு ஜாக்கி ஜட்டி மாட்டி விடுறது எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல. அட்லீஸ்ட் ஒரிஜினல் JOCKEYக்கு பதிலா, போலி JOOKEYயாவது மாட்டிவிட்டுருக்கலாம். 200 ரூபாப்பு….

பீட்டா கண்ணுல பட்டுடாத கண்ணா...

பீட்டா கண்ணுல பட்டுடாத கண்ணா…
மாட்ட மெஷின்குள்ள போட்டு கொடூரமா கொன்னு அதுல இருந்து நவநாகரீக பெல்ட், ஹான்ட்பேக் மற்றும் பிற உபகரண பொருட்கள் தயாரிச்சா அத எல்லாம் பீட்டா ஒன்னும் சொல்லாது. இப்படி நீ மூணு கோடுப்போட்டு கிரிக்கெட் விளையாடும் போது பந்துப்பட்டு அதுக்கு வலிச்சிடுச்சுன்னா பீட்டா மனசு அப்படியே துடிச்சு போயிடும்.

கண்கூட பார்க்கலாம்!

கண்கூட பார்க்கலாம்!
பெரும்பாலான ஏ.டி.எம் செண்டர்ல பார்த்தீங்கன்னா இந்த உண்மை புரியும். பல வங்கிகள் ஏ.டி.எம் குறைந்த சம்பளத்துல வேலை ஆட்கள் வேணும்ன்னு ரிட்டயர்ட் ஆன வயதான நபர்கள செக்கியூரிட்டி வேலைக்கு வைக்கிறாங்க. அவங்களுக்கு அந்த பணம் போதாதுங்கிற சூழல் வரும் போது அங்கேயே வேற வேலை பார்க்க ஆரம்பிச்சிருவாங்க.

பிரச்சனை இது இல்ல சார்… திருட வரவன் எல்லாம் திடகாத்திரமா இருப்பான். அவங்கள எதிர்க்க இவங்க உடம்புல தெம்பு இருக்கணும்ல. அட்லீஸ்ட் கடைசி காலத்துல அவனுங்ககிட்ட அடிவாங்கி மோசமான நிலைக்காவது ஆளாகாம இருக்கணும்ல. இவங்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம்ன்னு சொல்ல வரல, அட்லீஸ்ட் இவங்களுக்கு மார்னிங் ஷிப்ட் கொடுத்துட்டு, நைட் ஷிப்ட்ல இளவட்ட பசங்கள நியமிக்கலாம்.