தோழிக்கு அனுப்பிய அந்த கடைசி மெசேஜ்: இளம் பெண் மரணத்தில் அதிரடி திருப்பம்

344

விமான பணிப்பெண் தற்கொலை விவகாரத்தில் அவர் கடைசியாக தோழிக்கு அனுப்பிய மெசேஜ் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த அனிசியா பத்ரா தனது கணவர்

மாய்ங்க் சிங்வியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 13-ஆம் திகதி வீட்டு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பதற்கு முன்னால் தனது கணவர் மாயங்க் சிங்விக்கு தான் இறக்க போவதாக செல்போனில் மெசேஜ் அனுப்பியதாக பொலிசார் ஏற்கனவே தெரிவித்தனர்.

மேலும், திருமணமானது முதலே வரதட்சணை கேட்டு மனைவியை மாயங்க் அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பத்ரா குடும்பத்தார் பொலிசிடம் கூறியிருந்தனர்.

இந்நிலையில் பத்ரா இறப்பதற்கு முன்னர் தனது தோழிகளுக்கு மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளது.

இது குறித்து பத்ராவின் தோழியை பொலிசார் விசாரித்துள்ளனர். அவர் கூறுகையில், பத்ரா இறப்பதற்கு முன்னர் அவர் கணவர் எனக்கு போன் செய்தார்.

அவர்கள் பிரச்சனை எனக்கு தெரியும் என்பதால் நான் சமாதானம் செய்தேன்.

பின்னர் மாலை 3.56 மணிக்கு பத்ரா எனக்கு மெசேஜ் அனுப்பினார். அதில், தன்னை அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் இது குறித்து பொலிசில் சொல் என கூறினார்.

நான் டெல்லியில் இல்லாததால் உடனடியாக என்னால் உதவ முடியவில்லை, நீ தோழி வீட்டுக்கு தப்பி சென்றுவிடு என கூறினேன்.

சிறிது நேரத்தில் மீண்டும் வந்த மெசேஜில் இந்த முடிவை எடுப்பதற்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன். நடந்ததை இனி சரி செய்ய முடியாது என கூறப்பட்டிருந்தது என தெரிவித்துள்ளார்.

தோழியின் வாக்குமூலத்தை வைத்து பத்ரா தற்கொலை செய்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.