நிறைவேறிய ஷங்கரின் நீண்ட நாள் ஆசை ! அதிர்ச்சியில் உறைந்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்

875

இயக்குனர் ஷங்கரின் நான்கு ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக கூறியுள்ளார்.

2.0 பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் சினிமாஸில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஷங்கர், ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

2.0 படத்தின் 4டி எஸ்.ஆர்.எல். டீஸர் போட்டுக் காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்துள்ள அனைவருக்கும் 3டி கண்ணாடிகள் கொடுக்கப்பட்டது. டீஸர் துவங்கியபோது ஒலி சரியாக கேட்கவில்லை.

இதையடுத்து மேடைக்கு வந்த ஷங்கர் டீஸரை மீண்டும் போட்டுக் காட்டுமாறு கோரிக்கை விடுத்தார். அதன்படி டீஸர் மீண்டும் போட்டுக் காட்டப்பட்டது. நாம் பார்த்த டீஸரில் உள்ள காட்சிகளுடன் கூடுதல் காட்சிகள் இதில் இருந்தது.

3டி டீஸரை 4டி சவுண்டுடன் கேட்டவர்கள் மெய் சிலிர்த்தனர். தியேட்டர்களில் பார்வையாளர்களின் கால்களுக்கு அடியில் ஸ்பீக்கர் வைக்கப்பட்டு 4 டி அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் ஷங்கர்.

இந்த 4டி சவுண்டில் தனது படத்தை வெளியிட வேண்டும் என்பது தனது நான்கு ஆண்டு கனவு என்று ஷங்கர் தெரிவித்தார்.