பெண்கள் மட்டும் பாருங்கள் பெண்கள் மட்டுமே பார்க்க வேண்டிய காணொளிப்பதிவு

555

பெண்கள் மட்டும் பாருங்கள் – வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இராவணனுக்கும், இலட்சுமணனுக்கும் உள்ள உறவுமுறை என்ன தெரியுமா? தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க…!

இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசமான இராமாயணத்தின் கதை என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இராமாயணத்தில் நாம் அறியாத பல கிளைக்கதைகள் உள்ளது. அதில் சில கதைகள் நம்மை ஆச்சரியப்பட வைப்பவையாக இருக்கும். அதில் ஒன்றுதான் இராவணனுக்கும், இலட்சுமணனுக்கும் உள்ள தொடர்பாகும். இருவரும் எதிரிகள் என்று மட்டுமே நாம் அறிவோம் ஆனால் அவர்களுக்குள் நெருங்கிய உறவுமுறையும் இருந்தது.

Relationship between Ravana and Lakshmanaஆம் இராவணனின் மகனான இந்திரஜித் என அழைக்கப்பட்ட மேகநாதனின் மனைவி வேறு யாருமல்ல இலட்சுமணனின் மகள்தான். இராமாயண போரில் மேகநாதன் இலட்சுமணன் கையால்தான் கொல்லப்பட்டான், அதற்கு காரணம் அவன் பெற்றிருந்த சாபமாகும். இந்த பதிவில் இந்திரஜித், இராவணன் மற்றும் இலட்சுமணனுக்கு இடையே எப்படி இந்த உறவுமுறை ஏற்பட்டது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இலட்சுமணன்

இலட்சுமணன்
இராமனின் சகோதரனான இலட்சுமணன் இராமாயணத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் ஆவார். சகோதரனுக்காக இவர் செய்த தியாகங்கள் காலம் உள்ளளவும் எவராலும் மறக்கமுடியாத ஒன்றாகும்.

ஆனால் உண்மையில் இலட்சுமணன் மஹாவிஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷனின் அவதாரம் ஆவார். இராமருக்கு சேவை செய்வதற்காக இலட்சுமணனாய் பிறந்திருந்தார், அதேபோல மகாபாரதத்திலும் கிருஷ்ணரின் சகோதரன் பலராமனாக இவர்தான் பிறந்தார்.

இராவணன்

இராவணன்
இலங்கையை ஆண்ட அசுர வேந்தன் இராவணன் தீர்த்த யுகத்தில் இராமருக்கு எதிராகவும், இலட்சுமணனுக்கு எதிராகவும் போர் புரிந்தார். போரில் அவருக்கு அவரின் மகன்கள் அனைவரும் உதவி புரிந்தனர். அதி ஒருவன்தான் மேகநாதன்.

லட்சுமணனின் மகள்

லட்சுமணனின் மகள்
இராமாயணத்தில் இலட்சுமணனுக்கு மகள் இருந்ததாக எந்த குறிப்பும் இல்லை, ஆனால் விஷ்ணு புராணத்தின் படி ஆதிசேஷனுக்கு சுலோச்சனா என்னும் மகள் இருந்ததாக கூறப்படுகிறது. நாகங்களின் அரசனாக இருந்த ஆதிசேஷனுக்கு மகளாக நாகலோகத்தின் இளவரசியாக இருந்தால் சுலோச்சனா.

இராவணன் மகன்

இராவணன் மகன்
இராவணனுக்கு பல மகன்கள் இருந்தனர். ஆனால் அனைவரை விடவும் இராவணன் அதிக பாசம் வைத்திருந்தது தன்னுடைய மூத்த மகன் மேகநாதன் மீதுதான். வீரத்தில் இராவணனுக்கு சற்றும் குறைவில்லாதவனாக இருந்தான் மேகநாதன். இந்த பெயர் வைக்க காரணம் அவனின் பிறந்த அழுகையானது முகில் வெடிப்பின் சத்தத்தை போன்று இருந்ததாம்.

இந்திரஜித்

இந்திரஜித்
மேகநாதனுக்கு இந்திரஜித் என்னும் பெயர் இருந்தது, இதன் பொருள் இந்திரனை வெற்றி கொண்டவன் என்பதாகும். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடந்த போது மேகநாதன் இந்திரஜித்தை வெற்றிகொண்டு அவரை தன் மாயரதத்தில் கட்டி சிறைப்பிடித்தான். அப்போது பிரம்மா தோன்றி இந்திரனை விடுவிக்கும்படி வினவினார். அதற்கு ஒப்புக்கொண்ட மேகநாதன் பிரம்மாவிடம் வரம் ஒன்றை கேட்டான்.

பிரம்மாவின் வரம்

பிரம்மாவின் வரம்
மேகநாதன் மரணமில்லா வாழ்க்கையை கேட்டான் ஆனால் மரணமில்லா வாழ்க்கை என்பது இயற்கைக்கு எதிரானது என்று கூறி அந்த வரத்தை கொடுக்க மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக அவனின் குலதெய்வமான நிகும்பலாவிற்கு செய்யும் யாகம் அழிக்கப்படாத வரை அவனுக்கு மரணம் நேராது என்ற வரத்தை கொடுத்தார். அந்த யாகத்தின் முடிவில் மேகநாதன் மறையக்கூடிய ரதம் ஒன்றை பெற்றான். அதன்மூலம் அவன் எந்த போரிலும் மறையக்கூடிய சக்தியை பெற்றான். ஆனால் இந்த யாகத்தை அழிக்கக்கூடியவன் உன்னை அழிக்க இயலும் என்றும் எச்சரித்தார். மேகநாதனுக்கு இந்திரஜித் என்னும் பெயர் வழங்கியதே பிரம்மாதான்.

சுலோச்சனாவின் சாபம்

சுலோச்சனாவின் சாபம்
சுலோச்சனாவின் தந்தையான ஆதிசேஷன் அவளுக்கு இந்திரனை மணம் முடிக்க எண்ணினார், ஆனால் சுலோச்சனா அதற்கு மறுத்துவிட்டாள். அதனால் கோபமுற்ற ஆதிசேஷன் சுலோச்சனாவை மணந்து கொள்பவன் என் அவதாரத்தால் கொல்லப்படுவான் என்று சாபமளித்து தன் பேச்சை கேட்காததால் ப்ரித்வி லோகத்தை விட்டு அவளை வெளியே அனுப்பிவிட்டார்.

சுலோச்சனா திருமணம்

சுலோச்சனா திருமணம்
இலங்கையை ஆண்ட இராவணன் தானே கடவுளாக வேண்டுமென்று ஆசைகொண்டான். தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற மேகநாதன் உயரிய சக்திகளை அடைய தவம் செய்ய தொடங்கினான். அவனின் தவத்திற்காக பிரம்மா அவன் கேட்ட சக்திகளை அவனுக்கு வழங்கினார். திவ்ய சக்திகளை அடைந்த மேகநாதன் இந்திரலோகம் மீது போரை தொடங்கினான். இந்திரனை விரட்டி சென்ற மேகநாதன் விஷ்ணு கோவிலில் இருந்த சுலோச்சனாவின் அழகில் மயங்கி அவளை அங்கேயே திருமணம் செய்து கொண்டான்.

சுலோச்சனாவின் குழப்பம்

சுலோச்சனாவின் குழப்பம்
திவ்ய சக்திகளை பெற்ற மேகநாதன் வெற்றி தாகத்தில் மரணத்தின் கடவுளான எமதர்மனையும் சிறைபிடித்தான். இலங்கையில் சுலோச்சனாவின் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. தன்னுடைய விருப்ப கடவுளான விஷ்ணுவை வணங்க அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடவுள் மீதான பக்திக்கும், கணவனின் கட்டளைக்கு இடையில் மாட்டிக்கொண்டு திணறினாள் சுலோச்சனா. கணவனின் கட்டளையை மீறமுடியாது என்பதால் கடவுள் பக்தியை கைவிட்டால்.

போரில் இந்திரஜித்

போரில் இந்திரஜித்
சீதையை இலங்கைக்கு இராவணன் தூக்கி வந்த பிறகு போர் மூண்டது. போரில் தந்தையின் சார்பாக மேகநாதன் கலந்து கொண்டான். இந்திரஜித்தின் அஸ்திரத்ததால்தான் இலட்சுமணன் மூர்ச்சையடைந்து அவரை குணப்படுத்த அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது, அந்த அளவிற்கு மேகநாதன் ஆற்றல் பெற்றவனாக இருந்தான்.

இந்திரஜித் வதம்

இந்திரஜித் வதம்
14 ஆண்டுகள் தூங்காமல் இருந்ததால் இலட்சுமணன் நிகும்பலையின் யாகத்தை அழிக்கும் ஆற்றலை பெற்றிருந்தார். பிரம்மா முன்னரே கூறியது போல நிகும்பலையின் வேள்வியை அழிக்கக்கூடியவன் இந்திரஜித்தையும் வதைக்கக்கூடும். அதன்படி இந்திரஜித் இலட்சுமணனால் வதைக்கப்பட்டான். அதாவது ஆதிசேஷன் தன் மருமகனை இலட்சுமண அவதாரத்தில் கொன்றார்.

சுலோச்சனாவின் மறைவு

சுலோச்சனாவின் மறைவு
வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்திரஜித் வதைக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின் சுலோச்சனா உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்து கொண்டாள். இறப்பதற்கு முன் தன் குழந்தைகளை விபீஷணனிடம் ஒப்படைத்து விட்டாள் ஏனெனில் இராவணனின் மரணத்தை சுலோச்சனா முன்கூட்டியே அறிந்திருந்தாள்.