பேஸ்புக் பெண் தோழிகளிடம் பெண் குரலில் பேசி இளைஞன் செய்து வந்த செயல்… விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி

167

தமிழகத்தில் பெண்களை குறி வைத்து அவர்களிடம் நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்த நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவர் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதால், பொலிசார் இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, இவன் பெண்களிடம் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் இருக்கும் பெண்களிடம் முதலில் நண்பர் ஆகிவிடும் இவர் அதன் பின் பெண் குரலில் பேசி, நாம் வைத்திருக்கும் நகைகளை ஒரு குறிப்பிட்ட கோவிலில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்று அவர்களின் ஆசையை தூண்டுவிடுவார் என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்களும் அவர்கள் சொன்னதை நம்பி நகைகளை வைத்து சுற்றி வரும் போது, அவர்கள் வருவதற்குள் அங்கு வைக்கப்பட்டிருக்கும் நகைகளை இவர் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவார்.

நவீன்குமார் தனது நண்பர் ராஜ்குமாருடன் சேர்ந்தே இந்த நூதன நகை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதனால் இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்து, 3 லட்சம் ரூபாய் மற்றும்,61 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.