பைல்ஸ் எனும் மூலம் குணமாக இந்த ஒரு பொருளை யூஸ் பண்ணுங்க.

393

உணவே மருந்தே உணவு என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது நமது தமிழ் மருத்துவம். அவ்வகையில் நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் நோய்களைப் போக்கும் அரிய குணங்கள் அடங்கியுள்ளன.

முக்கனிகள் எனப்போற்றப்படும் மா,பலா,வாழை இதில் முதல் இடத்தில் உள்ளது மா எனப்படும் மாம்பழம் ஆகும்.அனைத்து பழங்களின் சுவைகளி லும் விஞ்சி நிற்பது இதுவே ஆகும். இது சுவைகளில் மட்டுமல்ல வேதனை தரும் நோய்களை போக்கும் அரிய குணமும் இதற்குண்டு.

வெயில் காலங்களில் வரும் மாம்பழ சீசனில் மாம்பழத்தை உண்டுவிட்டு கொட்டையை தூர எரிந்து விடுவோம். ஆனால் அந்த கொட்டயில் உள்ள பருப்பில் அற்புதமான மருத்துவ குணம் அடங்கி உள்ளது.

பெரும்பாடு , அதிக உதிரப்போக்கு குணமாக ;
மாங்கொட்டயின் உட்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து தூள் செய்து ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து ஒரு வாரம் தினசரி உண்டால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் தோன்றக்க்கூடிய அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி குணமாகும் .

சீதபேதி,வயிற்றோட்டம் குணமாக – Dysentery, Diarrhea
மாம்பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இந்த நான்கும் 2-கிராம் அளவு எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் அளவு மோரில் கலந்து உண்ண இரண்டு வேளையில் சீதபேதி, வயிற்றோட்டம் குணமாகும்.

இரத்த மூலம் குணமாக – Bleeding Piles
மாங்கொட்டயின் உட்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து தூள் செய்து அரை டீஸ்பூன் அளவு எடுத்து 50 -மிலி தயிரில் கலந்து உண்ணவும்.இது போல் காலை,மாலை இரண்டு வேளை உண்ண மூன்று அல்லது ஐந்து நாட்களில் இரத்த மூலம் குணமாகும்.

மேலும் சில இதர வழிகளை பார்க்கலாம்

மூல நோயால் அவதிப்படுபவர்கள், எருக்கம் இலையில் ஆமணக்கு எண்ணெய்யைத்தடவி, தணலில் வாட்டி ஆசன வாயில் வைத்துக் கட்டிக்கொண்டால், விரைவில் குணம் பெறலாம். ரோஜாப்பூவில் தயாரிக்கப்பட்ட சர்பத்தை அடிக்கடி குடித்துவந்தால் மூலச்சூடு குறைந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம் பழத்தோலை ஊற வைத்த தண்ணீரால், மழை கழித்த பிறகு ஆசன வாயைக் கழுவினால், மூலத்தால் ஏற்பட்ட புண் குணமாவதுடன், ரத்தப்போக்கும் நிற்கும்.துத்திக் கீரைச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் பசும்பாலில் கலந்து குடித்தால் மூல நோய் குணமாகும்.

காட்டாமணக்கு இலையை நன்றாக அரைத்து ஆசன வாயில் தடவினால், சில நாள்களிலேயே உள் மூலம் குணமாகும்.மணத்தக்காளிக் கீரையையும், வெங்காய்த்தையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் மூலச் சூடு குறையும்.

தர்ப்பை வேர் மற்றும் சிற்றாமுட்டி வேர் இரண்டையும் அரிசி கழுவிய நீர் சேர்த்து நன்றாக அரைத்து மிளகு அளவு சாப்பிட்டு வந்தால் மூல நோயால் ஏற்படும் ரத்தப்போக்கு நிற்கும்.துத்திக் கீரையை ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி, ஆறிய பிறகு ஆசன வாயில் வைத்துக் கட்டி மறுநாள் அகற்றிவிட்டால், இரண்டே நாளில் மூல நோய் குணமாகும்.

வில்வம், கஸ்துாரி மஞ்சள், கொத்தமல்லி, ஓமம், கல்உப்பு ஆகியவற்றைப் பொடியாக்கி, தினமும் 5 கிராம் எடுத்து ஒரு ஸ்பூன் நெய்யுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் மூலம் குணமாகும்.சிறுநாகப்பூ, ஏலக்காய், சுக்கு, திப்பிலி, இலவங்கம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடியாக்கி, ஒருநாளில் ஏதாவது ஒரு வேளை பனங்கற்கண்டுடன் கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

காட்டுத் துளசியின் விதைகளைக் காயவைத்துப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் பொடியைப் பாலில் கலந்து குடித்தால் உள் மூலம் முழுமையாகக் குணமாகும்.

அமுக்கிரா கிழங்கைப் பசும்பாலில் வேகவைத்து எடுத்து, வெய்யிலில் காயவைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டால் மூல நோய் சரியாகும்.அதிமதுரத்தைப் பொடி செய்து, மாதுளம் பழச் சாறில் (ஒரு அவுன்ஸ்) 5 கிராம் பொடியைக் கலந்து சாப்பிட்டால் மூலச்சூடு, மூலக்கடுப்பு போன்றவை குணமாகும்.