பொள்ளாச்சியை போல நாகையிலும் வெளியான அதிர்ச்சி சம்பவம்

498

பொள்ளாச்சியை போல நாகையிலும் வெளியான அதிர்ச்சி சம்பவம்– வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள்…
இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

* இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

பிற செய்திகள்:-

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. போராடிய மாணவர்களை இழுத்து வேனில் ஏற்றிய புதுக்கோட்டை போலீஸ்

புதுக்கோட்டை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து போராடிய மாணவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர் அமைப்பினர்

மாணவர் அமைப்பினர்
இந்த நிலையில், புதுக்கோட்டை அரசுக் கலைக்கல்லூரி மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் அரவிந்த சாமி உட்பட மாணவர் அமைப்பினர் சிலரும் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை
இதையடுத்து, புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் தலைமையில் அங்கு திரண்ட போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

கோஷமிட்ட மாணவிகள் கோஷமிட்ட மாணவிகள்
மாணவிகள் கலைந்து செல்ல மறுத்து, தொடர்ந்து கண்டனக் கோஷங்களை எழுப்பினர். கல்லூரியிலிருந்து மாணவிகள் பலரும் போராட்டத்தில் ஈடுபட சாலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

பரபரப்பு பரபரப்பு
போராட்டத்துக்குத் தூண்டியதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரை போலீஸார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.