பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சிக்கிய சென்னை பெண் மருத்துவர்! பகீர் தகவல்கள்

714

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், கோவையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை உள்ளிட்டோர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர், கோவையை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்கள் தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்து வரும் பொலிசார் அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது

இந்த கும்பல் கடந்த 7 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாக கூறப்படும் நிலையில், கைதான 4 பேரை தவிர வேறு யாருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இல்லை என பொலிசார் மறுத்து வருகின்றனர்.

தற்கொலை செய்துகொள்ளப்போகிறோம்……களங்கம் ஏற்படுத்துகிறார்கள்: பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணன் வேதனை

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம்! முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யார் தப்பு பண்ணா.. அந்த பொண்ணுங்களை விசாரிங்க..பெண்களை சீரழித்த மகனை காப்பாற்ற வாதாடும் திருநாவுக்கரசின் தாய் லதா..!! வைரலாகும் வீடியோ

வேணா அண்ணா அடிக்காதீங்க யாருக்கிட்டியும் சொல்லமாட்டா உங்கள நம்பிதான வந்த பாருங்கள்!!

என் பையனா இருந்தா… பொள்ளாச்சி பாலியல் விவகாரம்.. நடிகை நிலானி வெளியிட்ட பரபரப்பு வீடியோ