போட்டியாளராக வந்த தொகுப்பாளினிக்கு திடீர் திருமணம்… பிரபல ரிவியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

292

பிரபல ரவியின் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது வாடகை வீட்டில் கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

தொகுப்பாளினி மணிமேகலை மற்றும் நடன இயக்குனர் ஹுசைன் கடந்த வருடம் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஒன்றாக வசித்து வந்தாலும் மணிமேகலை ஹீசைனின் மதத்திற்கு ஒன்றாக மாறவில்லை. இதனால் ஹீசைனின் வீட்டிலும் இவர்களை சேர்க்கவில்லை.

தற்போது இவர்கள் இருவரும் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர். தனது திருமணத்தைக் குறித்து வருத்தப்பட்ட இந்த தம்பதிகள் இருவருக்கும் பிரபல ரிவி திருமணம் செய்து வைத்துள்ளது.