மணமேடையில் சூப்பராக குத்தாட்டம் போட்ட மணமகள்.. சிலையாக நின்ற மாப்பிள்ளை… வைரலாகும் வீடியோ

451

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்தாண்டு வெளியானது ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பாடகி தீக்‌ஷிதா வெங்கடேசன் உடன் தனுஷ் எழுதிப் பாடிய ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார்.

இந்த பாடல் வெளியான நாளிலேயே மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்றது. அதுமட்டுமல்லாது, டிக்டாக் அப்ளிகேஷனில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்கள், இளம்பெண்களும் இந்த பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்துள்ளனர் என்று தான் கூர வேண்டும். அந்த அளவிற்கு சமூக ஊடகங்கள் அனைத்திலும் வேற லெவலில் ரீச்சானது.

இதைத் தொடர்ந்து, திருமணங்களில் மணமக்கள் கூட இந்த பாடலுக்கு நடனமாட ஆரம்பித்தனர். அவ்வாறான வீடியோக்கள் இணையத்தில் அதிகளவில் லைக்குகளை தட்டிச் சென்றது.

அதுபோல, குறித்த வீடியோவிலும், ஒரு திருமண விழாவில், மணமகள் இந்த பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.

அப்போது, மாப்பிள்ளையை நடனமாட அழைக்க, ஆனால் அவர் வெட்கத்தில் வர மறுத்து சிலையாக நிறு கொண்டிருந்த விதமும், மணமகள் நடனமாடி அசத்தியதும் பார்ப்பவர்களை அதிகளவில் ரசிக்க வைத்துள்ளது.

இந்த விடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

Ayyo Intha Ponnu Ennama Dance Pannuranga…❤❤❤ #DubsmashTamil #TikTok

Posted by Dubsmash Tamil on Tuesday, March 5, 2019