மனைவி கணவனுக்கு எழுதி சென்ற வில்லத்தனமான குறிப்புகள்! வாயடைத்து போன கணவர்? 10 நிமிடம் படித்து சிரியுங்கள்

2171

மனைவி- நான் எங்க அம்மா வீட்டுக்கு குழந்தைகளோட போறேன். திரும்பி வர 10 நாட்களாகும்.

 • நண்பர்களை அழைத்து கூத்தடிக்க வேண்டாம்.
 • போனமுறை கதிரைக்கு பின்னாலிருந்து நான்கு பாட்டிலும், சிகரெட் பாக்கெட்டுகளும் எடுத்தேன்.
 • குளியலறையில் சோப் கேசில் மொபைல மறந்து வைத்துவிடாதீர்கள்.
 • போன முறை தேடி அலையும் போது குளியலறையில் கண்டு எடுத்தேன்.
 • மூக்குக்கண்ணாடியை அதன் box இல் வைக்கவும். போன முறை ஃப்ரீட்ஜில் இருந்தது.
 • வேலைக்காரிக்கு சம்பளம் தந்தாச்சு. உங்க தாராள மனச காட்ட வேண்டாம்.
 • காலையில் பக்கத்து வீட்டுக்கு பேப்பர் போட்டாச்சான்னு daily அவங்ககிட்ட வழிய வேண்டாம். நம்ம பேப்பர்காரன் வேற. சமையல் கட்டு பக்கம் போக வேணாம்!
 • ஸிங்க்கு காவி கலருக்கு மாத்தினீங்கன்னா சும்மா இருக்க மாட்டேன்,
 • சாமி படத்துக்கு விளக்கேத்துங்க, இரண்டு ஸ்லோகம் சொன்னா நாக்கு வெந்துடாது
 • வாக்கிங் போறப்போ டீ ஷர்ட் போட்டுக்கோங்க.. ஜிப்பா வேணாம்
 • ஜிப்பா கலர்ல Free size சுடிதார் டாப்ஸ் இருக்கு அனிதா அன்னிக்கு சிரிச்சா Food coupon க்ரெடிட் கார்டு எங்கிட்ட இருக்கு… பீரோவ உருட்ட வேணாம்.
 • ரெண்டு Securityக்கும் 100 ரூபா கொடுத்திருக்கேன். நீங்க லேட்டா வந்தா Gate திறக்க வேண்டாம் என்று.
 • பால் ஒரு வாரத்துக்கு வேண்டாம்னுட்டேன். அங்க ஸீன் க்ரியேட் பண்ணாம வெளில போய் சாப்பிடுங்க.
 • உங்க உள்ளாடைகள் பீரோவில் வலது புறமும், குழந்தைகளோடது. இடது புறமும் இருக்கு.
 • மாத்தி போட்டுட்டு Uncomfortable லா இருந்ததுனு ஆஃபீசுல இருந்து புலம்பாதீங்க.
 • அன்னன்னிக்கு அவுத்து போடறத தண்ணில நனச்சு காயப்போடுங்க. வளத்தவங்கள சொல்லனும்..
 • தூங்கி எழுந்த உடனே பால்கனில நின்னுகிட்டு பல் தேய்காதீங்க..
 • A.M. மா… P.M. மா… Confirm பண்ணிட்டு பால்கனிக்கு வாங்க.. உங்க medical report பர்ஃபெக்ட்டா இருக்கு.
 • அந்த லேடி டாக்டரை பாக்கவேண்டிய அவசியமில்லை.
 • என் தங்கையின் பிறந்தநாள் போன மாசமே நாம அட்டண்ட் பண்ணியாச்சு. முடிஞ்சிடிச்சி.நடு ராத்திரில விஷ் பண்றேன் பேர்வழின்னு வழிய வேணாம்.
 • பத்து நாள் wi-fi cut. password மாத்திட்டேன். நிம்மதியா தூங்குங்க.
 • அப்றம் என் தோழிகள் எல்லாமே Out of station.. கட்டக் கடேசியா ஒண்ணு.

ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்கறதா நினச்சி ஏதும் பண்ண வேண்டாம். நான் எப்ப வேணாலும் திரும்பி வந்துருவேன். சொல்லாம..!!!

 • கணவர் – இவ பொண்டாட்டியா கட்டுனதுக்கு ரெண்டு போண்டா டீ சாப்பிட்டு தூங்கியிருக்கலாம்.. என்னா ஒரு வில்லத்தனம்.