மிரட்டல் கவர்ச்சியால் ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை காஜல் அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே

143

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். ஒரு வருடத்திற்கு ஏழு படங்கள் வரை அவருடைய படங்கள் ரீலீசான காலமும் இருந்தது. ஆனால், இப்போது காஜல் அப்படி நடிப்பதில்லை, படங்களைக் குறைத்துக் கொண்டார். அப்படி படங்களைக் குறைத்ததற்கு என்ன காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

“எனக்கு அப்படி ஒரு வருத்தம் வரும் வரைக்கும் அது பற்றி உணராமல் இருந்தேன். 2013ல் எனது சகோதரிக்கு திருமணம் நடைபெற்ற போது, நான் அந்தத் திருமணத்தில் ஒரு விருந்தினர் போலத்தான் கலந்து கொண்டேன். ஒரு குடும்ப உறுப்பினராக அந்தத் திருமணத்தில் என்னால் முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை. அவள் எனக்கு மிகவும் நெருக்கமானவள். அவளுடைய சிறந்த நாள் ஒன்றுக்கு என்னால் முழுமையான நேரத்தை செலவிட முடியவில்லை என்பது என்னை பாதித்தது.

அதன்பிறகுதான் படங்களைக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். வருடத்திற்க நான்கு படங்களுடன், குடும்பத்தினருடன், நண்பர்களுடன் நேரத்தை செலவிட முடிகிறது. இப்போதும் நான் கடுமையாக உழைப்பேன். ஆனால், 24 மணி நேரமும் வேலையில் இருக்க விரும்பவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை தன் மீது வைத்துக்கொள்வதிலும் சளைத்தவர் கிடையாது. அந்த வகையில், சமீபத்தில் ரெட் ஹாட்டாக சிகப்பு நிற உடையில் படு கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்துள்ளார் அம்மணி.