முகத்தில் முடி வளராமல் தடுக்க: இந்த வழிகளை பின்பற்றுங்கள்

442

முகத்தில் முடி வளர்வது பெண்களின் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று. இப்பிரச்சனைகளை இயற்கை வழியில் போக்க சில அற்புத டிப்ஸ்கள் இதோ,

முகத்தில் முடி வளர்ச்சியை தடுப்பது எப்படி?
  • சிறிதளவு சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை கலந்து அதை முகத்தில் ரோமங்கள் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால் ஆகிய அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்த பின் நீரில் கழுவ வேண்டும்.
  • கஸ்தூரி மஞ்சள் தூளுடன், தேவையான அளவு பால் கலந்து அதை நன்கு குழைத்து ரோமங்கள் உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
  • எலுமிச்சை சாறுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை நன்கு குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
  • கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய அனைத்தையும் கலந்து முகத்தில் ஸ்கரப் செய்து வந்தால், முகத்தில் முடிகள் வளராது.